சப்பாத்தியையும், சாதத்தையும் சேர்த்து சாப்பிடாதீங்க... மீறினால் என்ன நடக்கும்னு தெரியுமா?
சப்பாத்தி மற்றும் சாதம் இரண்டையும் சேர்த்து சாப்பிட்டால் என்ன பிரச்சனை ஏற்படும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
உணவு என்பது மனிதர்களின் ஆரோக்கியத்திற்கு முக்கியமாக இருக்கின்றது. நாள் முழுவதும் சுறுசுறுப்புடனும், ஆரோக்கியமாகவும் இருப்பதற்கு சத்தான உணவுகளை சாப்பிடுவது அவசியம்.
ஆனால் இந்த சத்தான உணவுகளும் சில தருணங்களில் கெடுதலை ஏற்படுத்திவிடும். ஆரோக்கியமான உணவுகளில் சப்பாத்திக்கு தனி இடம் உள்ள நிலையில், இது எவ்வாறு நமக்கு தீங்கு விளைவிக்கும் என்பதை தெரிந்து கொண்டால் நிச்சயம் அதிர்ச்சியடைவீர்கள்.
அதாவது சப்பாத்தி மற்றும் சாதம் இவற்றினை சேர்த்து சாப்பிட்டால் தீங்கு விளைவிக்கும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.
அதாவது இரண்டிலும் பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ள நிலையில், இதனை ஒன்றாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டுமாம்.
சப்பாத்தி மற்றும் சாதம் சேர்த்து சாப்பிட்டால் என்ன பிரச்சனை?
சாதம் மற்றும் சப்பாத்தி இரண்டையும் ஒன்றாக சாப்பிட்டால் சர்க்கரையின் அளவு வேகமாக அதிகரிக்கச் செய்யும். இதனால் டைப் 2 நீரிழிவு நோயின் அபாயத்தை ஏற்படுத்தும். நீரிழிவு நோயாளிகள் கட்டாயம் தவிர்க்கவும்.
இவை இரண்டையும் ஒன்றாக சாப்பிட்டால், குடலில் நொதித்தல் பிரச்சனை ஏற்பட்டு, கிளைசெமிக் குறியீடு அதிகரிக்க வாய்ப்புள்ளதுடன், அஜீரண பிரச்சனையையும் ஏற்படுத்தும்.
உடலில் மாவுச்சத்து உறிஞ்சும் தன்மை அதிகரிக்க செய்யும். இது செரிமான பிரச்சனையை ஏற்படுத்துவதோடு மட்டுமின்றி, உடலில் வீக்கத்தை ஏற்படுத்தும் மற்றும் கொழுப்பை அதிகரிக்கச் செய்யும்.
இரண்டும் கார்போஹைட்ரேட்டின் நல்ல ஆதாரமாக இருக்கும் நிலையில், ஒன்றாக சாப்பிட்டால் வாயு, அமிலத்தன்மை, மலச்சிக்கல் போன்ற பிரச்சனையை ஏற்படுத்தும்.
சப்பாத்தி சாதம் சாப்பிட சரியான நேரம்?
சப்பாத்தி மற்றும் சாதம் இரண்டையும் இரண்டு மணி நேர இடைவெளியில் சாப்பிட வேண்டும். அதாவது ஒரு நேரத்தில் ஒன்றை மட்டுமே நீங்கள் சாப்பிட வேண்டும். இப்படி செய்வதன் மூலம் இரண்டு தானியங்களில் இருந்தும் முழுச்சத்தும் உங்கள் உடலுக்கு கிடைக்கும். இதனால் அஜீரணம், வாயு போன்ற பிரச்சனைகள் ஏற்படாது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |