காலாவதியான பொருட்களை சாப்பிட்டால் என்னவாகும்? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க
நாம் கடைகளில் பாக்கெட்டில் வாங்கி சாப்பிடும் உணவுகளில் காலாவதியாகும் தேதியும் கொடுக்கப்பட்டிருக்கும். அவ்வாறு காலாவதியான பொருளை சாப்பிட்டால் என்ன பிரச்சினை என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
காலாவதியான பொருட்கள்
கடைகளில் பாக்கெட்டில் அடைத்து கொடுக்கப்படும் உணவுப்பொருட்கள் அதன் தயாரித்து பேக்கிங் செய்த தேதியும், அது காலாவதியாகும் தேதியையும் கொடுத்திருப்பதை நாம் அனைவருமே அவதானித்திருப்போம்.
உணவுப் பொருள்கள் காலாவதி ஆகிவிட்டால் அது எவ்வளவு பெரிய மதிப்புடைய பொருளாக இருந்தாலும் குப்பையில் தான் போட வேண்டும்.
பொதுவாக உணவு பொருள் வாங்கும்போது காலாவதி தேதி கடந்து விட்டதா என்பதை பார்த்து வாங்க வேண்டும்.
காலாவதி தேதி இருந்தாலும் அதை நாம் பிரிட்ஜில் நீண்ட நாள் வைத்திருந்து மீண்டும் பயன்படுத்தும் போது மீண்டும் அதனை சோதனை செய்து கொள்ள வேண்டும்.
உலர்ந்த நிலையில் உள்ள நட்ஸ் போன்றவை காலாவது தேதியை கடந்திருந்தாலும் பார்க்க நன்றாக இருக்கும். ஆனால் கண்ணுக்கு தெரியாத பூஞ்சைகள் அதில் இருக்கும் என்பதால் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு பாக்டீரியா மற்றும் வைரஸ், பூஞ்சை தாக்கியுள்ள உணவுகளை சாப்பிட்டால் வாந்தி, குமட்டல், வயிற்றுப்போக்கு, காய்ச்சல் போன்ற தொந்தரவுகள் ஏற்படும் என்பதை கவனத்தில் கொள்ளவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |