தலைகுளிப்பதற்கு வெந்நீர் பயன்படுத்தலாமா? அவசியம் தெரிஞ்சுக்கோங்க
குளிர்காலம் வந்துவிட்டால் அனைவரும் வெந்ரீரை தான் தேடுவீர்கள். காலம் மாறும் போது எப்படியாவது நம் பழக்கவழக்கமும் மாறும்.அது உணவாகவுகவும் இருக்கலாம் வேறு எதுவாகவும் இருக்கலாம்.
இந்த குளிர்காலத்தில் காலையில் எழுந்தவுடன், சூடான தேநீர் மற்றும் சூடான குளியல் வேண்டும் என தோன்றும். குளிரில் இருந்து நிவாரணம் பெறவும், சோர்வைப் போக்கவும் சூடான நீர் சிறந்த வழி என்று நாம் நினைக்கிறோம்.
ஆனால் குளிர் நீரை விட சூடான நீரைப் பயன்படுத்தினால், அது நம் தலைமுடிக்கு எவ்வளவு ஆபத்தானது என்பது உங்களுக்கு தெரியுமா? இல்லை அதை பற்றி யோசித்துள்ளீர்கயளா? இதை பற்றி மருத்துவர் விரிவாக கூறியதை பார்க்கலாம்.]

சூடான நீரில் குளித்தால் என்னாகும்?
நாம் சூடான நீரில் குளிக்கும் போது தலையில் இருக்கும் இயற்கை எண்ணெய்கள் நீக்கப்படுகின்றன. இது தவிர நமது உச்சந்தலையில் இருக்கும் முடி அதிகமாக சேதமடையும்.
இதற்கான காரணம் தண்ணீர் மிகவும் சூடாக இருக்கும் போது அதை நீண்ட நேரம் பயன்படுத்துவதால் உச்சந்தலையில் எண்ணெய்கள் நீக்கபட்டு முடி சேதமடைகிறது.
இயற்கை எண்ணெய் தலைமுடி மென்மையாகவும் நீரேற்றமாகவும் மிகவும் முக்கியம். இது அகற்றப்பட்டால், முடி வறண்டு போகும். இதனால் வேர்களை பலவீனப்படுத்தும்.
இதன் விளைவாக, முடி உதிர தொடங்கி உச்சந்தலையில் அரிப்பு, பொடுகு மற்றும் எரிச்சல் போன்ற பிரச்சனைகளும் வரும்.

அதிலும் முடிக்கு வண்ணம் பூசுபவர்கள் வெந்நீர் குளியல் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும். இதன் விளைவாக, நிறம் விரைவாக போய்விடும். எனவே, தலைமுடிக்கு வண்ணம் தீட்டுபவர்கள் வெந்நீரைப் பயன்படுத்துவதை முற்றிலுமாகத் தவிர்ப்பது நல்லது.
நமது முடியானது சுமார் 95% கெரட்டின் எனப்படும் புரதத்தால் ஆனதாகும். நாம் நமது தலைக்கு வெந்நீர் பயன்படுத்தும் போது தலைமுடியில் இருக்கும் கெரட்டீன் புரதம் அப்படியே இல்லாமல் போகும்.
இது ஆரம்பத்தில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதாகத் தோன்றினாலும், வெப்பம் காரணமாக உச்சந்தலைவறண்டு வீக்கமடையும். இது முடி நுண்குழாய்களை பலவீனப்படுத்தி முடியை உதிரச்செய்யும்.

குளித்த பிறகு உங்கள் தலைமுடியை ஒரு துண்டைக் கொண்டு கடினமாக தேய்க்க வேண்டாம். இது முடி உடைவதற்கு வழிவகுக்கும். உங்கள் தலைமுடியை மெதுவாக உலர வைக்க மென்மையான பருத்தி துண்டைப் பயன்படுத்தவும்.
அல்லது ஒரு துண்டில் கட்டி விடுங்கள். குளிர்காலத்தில் வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை குளிப்பதை குறைக்கவும்.
இல்லையெனில், உங்கள் தலைமுடி வறண்டு, அதன் இயற்கை எண்ணெய்கள் இல்லாமல் போகலாம். உங்கள் தலைமுடி வகையைப் பொறுத்து ஷாம்பு, கண்டிஷனர் மற்றும் எண்ணெய்களைத் தேர்ந்தெடுக்கவும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |