அழகுராணி போட்டிக்கு தயாராகும் நாய்.. எப்படி எல்லாம் போஸ் கொடுக்குது பாருங்க!
அழகுராணி போட்டிக்கு தயாராகும் நாயின் வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பொதுவாக வீட்டில் வளர்க்கும் செல்லபிராணிகளில் அதிகமாக மனிதர்களுடன் ஒன்றிணைவது நாயும் பூனையும் தான்.
இவைகள் வீட்டில் செய்யும் சேட்டைகளுக்கு அளவே இல்லாமல் இருக்கின்றது. மனிதர்களுடன் இருந்து கொண்டு சில விடயங்கள் மனிதர்கள் போல் செய்ய கற்றுக் கொண்டுள்ளன.
வைரல் காட்சி
அந்த வகையில் அழகுராணி போட்டி நிகழ்ச்சி தயாராவது போல் கண்ணாடி முன் அமர்ந்து நாய் போஸ் கொடுக்கின்றது. கால்களை மாற்றி மாற்றி போஸ் கொடுத்து பார்க்கிறது. ஏதுவும் சரியாக வரவில்லை போல் தெரிகிறது.
பின்னர் குட்டியான பையொன்றை எடுத்து வாயில் வைத்து கொண்டு போஸ் கொடுத்து பார்க்கின்றது.
இந்த காட்சியை பார்க்கும் பொழுது வேடிக்கையாகவும் வியப்பாகவும் இருக்கின்றது.
சமூக வலைத்தளங்களில் காட்சியை பார்த்த இணையவாசிகள், நாயின் ரியாக்ஷனை பார்த்து அதிர்ச்சியடைந்து நகைத்துள்ளனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |