குளத்தில் விழப்போன சிறுவனை காப்பாற்றிய நாய்! நெகிழ வைக்கும் வீடியோ காட்சிகள்
குளத்தில் தவறி விழப்போன சிறுவனை அவர்களது செல்ல நாய் ஒன்று காப்பாற்றும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
குறித்த சம்பவம் எப்போது எங்கு நிகழ்ந்தது என்ற தகவல்கள் தெரியவராத போதும், நாயின் அறிவுக்கூர்மையை பார்த்து வியந்து போகிறார்கள் நெட்டிசன்கள்.
அந்த வீடியோவில், இருவர் விளையாடிக் கொண்டிருக்கும் போது எதிர்பாராதவிதமாக பந்து அருகில் இருந்த குளத்தில் விழுகிறது.
உடனடியாக குறித்த சிறுவன் பந்தை எடுக்க முயற்சி செய்கிறான், இதைப்பார்த்துக் கொண்டிருந்த நாய் அருகில் சென்று சிறுவனின் சட்டையை பிடித்து இழுத்து பத்திரமாக இருக்கும்படி கூறுகிறது.
தொடர்ந்து அருகிலிருக்கும் குச்சியை கொண்டு பந்தை எடுத்துக் கொடுக்கிறது, இப்படியான பதற்றமான சூழலில் ஒருநிமிடம் மனிதர்களே பதறிப்போகும் சூழலில் நாய் மிகவும் சாதுர்யமாக செயல்பட்டதை பலரும் பாராட்டி வருகின்றனர்.
தண்டவாளத்தில் குதித்த நபரை காப்பாற்றிய காவலர்