நாயை படகில் கட்டிவைத்து அடித்து கொலை செய்தது ஏன்? வெளியான சிறுவர்களின் பகீர் வாக்குமூலம்
கேரளாவில் நாய் ஒன்றினை இளைஞர் கட்டி வைத்து அடித்துக்கொல்லும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
கேரள தலைநகர் திருவனந்தபுரம் அருகே சிலர் கருப்பு நிற நாய் ஒன்றினை படகு ஒன்றில் முன்னங்கால்களை கட்டிப்போட்டு, தொங்கவிட்டுள்ளனர்.
அதுமட்டுமின்றி குறித்த நாயை அடித்து துன்புறுத்தும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்போர் மனதை பதபதைக்க செய்துள்ளது.
இவ்வாறு கொடூரமாக தாக்கப்பட்ட நாய் அதிக காயம்பட்டு உயிரிழந்துவிட்ட நிலையில், தற்போது இதற்கான காரணம் வெளியாகியுள்ளது.
குறித்த நாய் புரூனோ என்ற வகையைச் சேர்ந்தது. இதனை கிறித்துராஜ் என்பவர் 8 ஆண்டுகளாக வசித்து வந்துள்ளார்.
வீட்டின் அருகே எதாவது சத்தம் கேட்டால் குறித்த நாய் குரைத்து தனது உரிமையாளருக்கு சிக்னல் கொடுக்குமாம்.
இந்தநிலையில், கிறித்துராஜ் வீட்டின் அருகே வசிக்கும் சிறுவர்கள், அவரது வீட்டின் வழியே செல்லும் போதெல்லாம், நாய் குறைத்து வந்துள்ளது. இதனால் நாயை அடித்து கொலைசெய்துவிட்டு அதனை நாயின் உரிமையாளருக்கு அனுப்பியுள்ளனர்.
பின்பு கிறித்துராஜ் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில், சுனில், சில்வஸ்டர் மற்றும் மைனர் சிறுவன் என மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கொடூர சம்பவம் ட்விட்டரில் டிரெண்டானதையடுத்து #JusticeForBruno என்ற ஹேஷ்டேக் மூலம் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் குரல் எழுப்பியுள்ளனர்.
Heartbreaking Video of a Pet Dog #Bruno beaten to Death in Trivandrum, #Kerala
— Arun Prasanna G (@arun_8778) June 30, 2021
Complaint lodged @ #Vizhinjam Police Station but no #FIR or #Arrest as yet#JusticeForBruno @CMOKerala @TheKeralaPolice @vijayanpinarayi @rashtrapatibhvn @KeralaGovernor pic.twitter.com/cFbRbLXcG3