இவ்வளவு நீளமான நாக்கா? கின்னஸ் சாதனை படைத்த நாய்- இவ்வுலகில் யாமறியா வினோதம்
அமெரிக்காவில் ஜோயி என பெயரிடப்பட்ட லாப்ரடோர்- ஜெர்மன் ஷெப்பர்ட் கலவை கொண்ட நாய் கின்னஸ் சாதனை படைத்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வைரலாக உள்ளது.
நீளமான நாக்கு கொண்ட நாய்
அமெரிக்காவில் லூசியானாவை சேர்ந்த ஜோயி என பெயரிடப்பட்ட லாப்ரடோர்- ஜெர்மன் ஷெப்பர்ட் கலவை கொண்ட நாய் கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.
சுமாராக 12.7 சென்றி மீட்டர் நீளம் கொண்ட நாயின் நாக்கு பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த சாதனையை கால்நடை மருத்துவர் ஒருவரே இனங்கண்டுள்ளார்.
இதற்கு முன்பு பிஸ்பீ என்ற நாய் நீளமான நாக்கு கொண்டதாக சாதனை பட்டியலில் இருந்தது.
அதன் நாக்கு 9.49 சென்றி மீட்டர் இருந்த நிலையில், தற்போது அந்த சாதனையை ஜோயி முறியடித்துள்ளதுடன் பலராலும் தேடப்படுகிறது.
உரிமையாளரின் தனிப்பட்ட கருத்து
ஜோயி நாயின் உரிமையாளர்களான சாடி மற்றும் ட்ரூ வில்லியம்ஸ் ஆகியோர் இது குறித்து கருத்து தெரிவிக்கையில், “ஜோயி 6 வாரமாக இருக்கும் போது நாங்கள் அதனை வாங்கினோம்.
குட்டியாக இருக்கும் போதே ஜோயின் நாக்கு வாயில் இருந்து அடிக்கடி வெளியேறும். அது இவ்வளவு நீளமாக வளரும் என்று நினைத்தோம். இப்போது சாதனை படைத்துள்ளது.
அத்துடன், பந்துகளை எடுப்பது, அணில்களை துரத்துவது, கார் சவாரி செல்வது, கால்வாயில் நீந்துவது போன்றவற்றை விரும்புகிறது. அதற்கு குளிப்பதை வெறுக்கிறது..” என பேசியுள்ளார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாக உள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |