நாய் நக்கியதால் கை கால்களை இழந்த பெண்... எச்சரிக்கையான பதிவு
இங்கிலாந்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு வளர்ப்பு நாயின் உமிழ்நீர் கடைசியில் கை மற்றும் கால்களை எடுக்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளது.
நாய் நக்கியதால் பிரச்சனை
இங்கிலாந்தில் வசித்து வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் மன்ஜீத் சங்கா(52). இவர் கணவருடன் வோல்வர்ஹாம்டனில் வசித்து வருகின்றார்.
கடந்த ஆண்டு ஜீலை மாதத்தில் மன்ஜீத் கையில் சிறிய வெட்டுக்காயம் ஏற்பட்ட நிலையில், இதனை அவர் சரியாக கவனிக்காமல் தனது செல்லமாக வளர்த்து வந்த வளர்ப்பு நாயுடன் விளையாடியுள்ளார்.
அப்பொழுது வளர்ப்பு நாய் அவரது காயத்தை நக்கியுள்ளது. மறுநாள் இவருக்கு உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டு, சுயநினைவினை இழந்து கோமாவிற்கு சென்றுள்ளார்.

Sepsis தொற்று
பின்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குறித்த பெண்ணை மருத்துவர்கள் சோதித்து பார்த்ததில், அவருக்கு கடுமையான 'Sepsis' தொற்று ஏற்பட்டிருப்பதை உறுதி செய்தனர்.
மருத்துவனையில் 32 வாரங்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த குறித்த பெண் கோமாவில் இருக்கும் போது ஆறு முறை இதயம் துடிப்பினை நிறுத்தியுள்ளது.

இதனால் வேறு வழியின்றி மருத்துவர்கள் அவரது இரண்டு கை மற்றும் கால்களை அறுவை சிகிச்சை செய்து நீக்கியுள்ளனர். கடந்த 18ம் தேதி மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய அவர் செயற்கை உடல் உறுப்புக்கள் பொறுத்துவதற்கு நிதி திரட்டி வருவதாக கூறியுள்ளார்.
செல்லப்பிராணி உமிழ்நீரில் உள்ள பாக்டீரியாக்கள் மனிதர்களின் காயம் வழியாக எளிதில் உடம்பிற்கு சென்று இம்மாதிரியான தொற்றுக்களை ஏற்படுத்து உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துவதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |