வேர்க்கடலை தோலை இனி வீசாதீங்க - குதிகால் வெடிப்பிற்கு தீர்வு
வேர்க்கடலை தோலை இனிமேல் வீசாமல் அதை குதிகால் வெடிப்பிற்கு எப்படி பயன்படுத்தலாம் என்பதை பதிவில் பார்க்கலாம்.
குதிகால் வெடிப்பு
பலரும் பொதுவாக எதிர்கொள்ளும் ஒரு பிரச்சனை என்றால் அது குதிகால் வெடிப்பு பிரச்சனை தான். இந்த குதிகால் வெடிப்பு வந்தால் மிகவும் வேதனையாக இருக்கும்.
அத்தோடு கால் பார்க்கவே மிகவும் அருவருப்பாக இருக்கும். இதற்காக பலரும் விலை உயர்ந்த கிரீம்களை வாங்கி பயன்படுத்துகிறார்கள். ஆனால் விலை உயர்ந்த பொருட்கள் தற்காலிக பலனையே கொடுக்கும்.
இதை விட மிகவும் எளிய முறையில் கிடைக்கும் வேர்க்கடலை தோல் உள்ளது. அந்த வேர்க்கடலை தோலை குதிகால் வெடிப்பிற்கு எப்படி பயன்படுத்தலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

வேர்கடலை தோல்
வேர்க்கடலை தோல்களில் இயற்கை எண்ணெய் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளன. இது இறந்த கலன்களை ஈரமாக்கி அதை நீக்கி அவ்விடத்தில் புதிய கலங்களை வளரச்செய்யும்.
இந்த பேஸ்டை தயாரிக்க, காய்ந்த வேர்க்கடலை தோல்கள், தேங்காய் எண்ணெய், தேன் மற்றும் பச்சை பால். போன்றவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும்.

அந்த வேர்கடலை தோல்களை நன்றாக பொடி போல அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். இந்தப் பொடியில் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் அரை ஸ்பூன் தேன் சேர்த்து அரைக்க வேண்டும்.
இதனுடன் பச்சை பால் கொஞ்சமும் சேர்த்துக்கொள்ள வேண்டும். பின்னர் மறுபடியும் நல்ல பேஸ்ட் போல அரைத்து எடுக்க வேண்டும்.

காலை வெதுவெதுப்பான நீரில் 5 நிமிடங்கள் ஊறவைத்து, அந்த பேஸ்ட்டை வெடிப்புள்ள குதிகால்களில் தடவி, 5-7 நிமிடங்கள் மெதுவாக மசாஜ் செய்து, மேலும் 15-20 நிமிடங்கள் அப்படியே வைக்கவும்.
பின்னர் இதை சாதாரண நீர் கொண்டு கழுவி நன்றாக துடைத்து மாய்ஸ்சரைசர் தடவி, சாக்ஸ் அணியவும். இப்படி வாரம் இரண்டு மூன்று முறை செய்து பாருங்க குதிகால் வெடிப்பு இருந்த இடம் தெரியாது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |