முதலாளியுடன் நாய் செய்த காரியம்: இதுவரை இப்படியொரு காட்சியை பார்த்திருக்கவே மாட்டீங்க!
பெரு வெள்ளத்தில் சிக்கிய காரை நகர்த்தத முடியாமல் திணறிய தனது எஜமானருக்கு நாய் ஒன்று உதவி செய்திருக்கின்றது. இந்த சம்பவம்குறித்த காட்சிகளே தற்போது இணையத்தில் வைரலாகி மக்கள் மனதைக் கவர்ந்து வருகின்றது.
கடந்த சில தினங்களில் சீனாவை கடும் மழை புரட்டிப் போட்டு சென்றது. இதுபோன்று ஓர் மழை வெள்ளத்திலேயே ஸ்காட்லாந்து தற்போது சிக்கியிருக்கின்றது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வருகின்றது. இந்த மாதிரியான சூழ்நிலையில் தனது குடும்பத்துடன் காரில் வந்த ஓர் நபரே மழை வெள்ளத்தில் காரை ஓட்ட முடியாமல் சிக்கியிருக்கின்றார்.
கார் நகர முடியாமல் நீண்ட நேரம் திணறியதை அடுத்து அதன் உரிமையாளர் வெளியில் இறங்கி காரை தள்ளும் பணியில் ஈடுபட்டார். அப்போது அவருடன் காரில் வந்த அவரது வளர்ப்பு நாய் நீண்ட நேரமாக போராடிக் கொண்டிருந்த உரிமையாளருக்கு உதவி செய்ய தொடங்கியது. அதாவது, அந்நபர் காரைத் தள்ள கடும் சிரமம் சந்தித்ததை அடுத்து நாய் இரு கைகளை (முன்னங் கால்களை)க் கொண்டு காரை தள்ள உதவியது.
முன்னதாக காரில் இருந்து இறங்கிய அந்த நாய் சிறிது அங்கும்-இங்குமாக நீந்திக் கொண்டிருந்தது. இதையடுத்து தன் உரிமையாளர் காரை தள்ள சிரமப்படுவதை அறிந்து அதுவும் தள்ள உதவி செய்தது. காரை தள்ளியது ஓர் பெண் என கூறப்படுகின்றது.