குட்டி யானை உடை அணிந்து வந்த நாய் - வைரலாகும் க்யூட் வீடியோ
குட்டி யானை உடை அணிந்து அட்டகாசம் செய்த நாயின் வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
நாய் சேட்டை
நாய்கள் என்றாலே நன்றி சுவாசம். உன்னை வளர்ப்பதை விட ஒரு நாயை வளர்த்திருந்தால் நன்றி விசுவாசம் இருக்கும் என்று நம் வீட்டில் கூட பெரியவர்கள் ஏதோ ஒரு கோபத்தில் இப்படிப்பட்ட வார்த்தைகளை கூறுவது உண்டு.
சமூகவலைத்தளங்களில் கூட நாய்கள் உரிமையாளரை கொஞ்சுவதும், அவர்கள் சொல்லும் கட்டளைகளை அப்படியே கேட்டு நடப்பது போன்ற சேட்டையான வீடியோக்கள் வெளியாகி ஒரே நாளில் ட்ரெண்டாகி விடும்.
அப்படித்தான் ஒரு வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
குட்டி யானை உடை அணிந்த நாய்
அந்த வீடியோவில், நாய் ஒன்று குட்டி யானை உடை அணிந்து சாலையில் வருகிறது. இதைப் பார்த்ததும் அங்கிருந்தவர்கள் அந்த நாயையே பார்க்கின்றனர்.
அப்போது அந்த நாய் மயங்கி விழுவது போல் நடிக்கிறது. உடனே அதன் உரிமையாளர் சாவியை கொண்டு வந்து திருகியதும், உடனே எழுந்து ஓடுகிறது. நாய் செய்த சேட்டையைப் பார்த்து அங்கிருந்தவர்கள் சிரித்து மகிழ்கின்றனர்.
தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்ததும் நெட்டிசன்கள் ஆஹா... நான் கூட பார்க்கும்போது யானை என்றே நினைத்துவிட்டேன்... அதன் பிறகு தான் தெரிந்தது இது நாய் என்று.. சூப்பர் உடை என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
Super cute! Dog wearing a baby elephant costume. pic.twitter.com/hlDvj8CKry
— Jaz?️?? (@Jazzie654) April 26, 2023