பாஸ்போர்ட்டை மென்று சாப்பிட்ட நாய்... திருமணம் செய்ய முடியாமல் தவிக்கும் மணமகன்
திருமணத்திற்கு சில நாட்களே உள்ள நிலையில் நாய் ஒன்று மணமகனின் பாஸ்போர்ட்டை மென்று சாப்பிட்ட சோகம் அரங்கேறியுள்ளது.
திருமணம்
அமெரிக்காவின் பாஸ்ட்டனில் வசித்து வருபவர் டொனாடோ ஃப்ராட்டரோலி மற்றும் அவரின் வருங்கால மனைவி மக்தா மஸ்ரி.
இவர்களின் திருமணம் வரும் 31ம் தேதி நடைபெற இருந்த நிலையில், திருமணத்திற்கான படிவத்தினை நிரப்புவதற்கு சிட்டி ஹாலுக்கு சென்றுள்ளார்.
அப்பொழுது வேலை முடித்து வீடு திரும்பியபோது சிக்கி என்ற இவரது செல்லப்பிராணியான நாய் மணமகனுடைய பாஸ்போர்ட்டின் பல பக்கத்தை கடித்து சாப்பிட்டுள்ளதை அவதானித்துள்ளார்.
திருமணத்திற்கு சில நாட்களே உள்ள நிலையில் இப்படி நடந்தது அவர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. தற்போது இந்த தம்பதியினர் மாற்று பாஸ்போர்ட்டை பெறுவதற்கு உள்ளூர் அதிகாரிகளை தொடர்பு கொண்டுள்ளனர்.
மணமகன் பேச்சு
இதுகுறித்து மணமகன் கூறுகையில், 'நான் இப்போது சிறிய மன அழுத்தத்தில் உள்ளேன். ஆனால் அதிர்ஷ்டவசமாக உள்ளூர் அதிகாரிகள் எனக்கு மாற்று பாஸ்போர்ட் பெற்று தருவதற்கு முயற்சிக்கின்றார்கள்.
உரிய நேரத்தில் பாஸ்போர்ட் பெற முடியவில்லை என்றால் தனது வருங்கால மனைவி அவரின் உறவினர்களோடு இத்தாலிக்கு செல்லும் போது நான் வீட்டில் இருக்க நேரிடும்.
மேலும் அவர்கள் அமெரிக்கா திரும்பியதும் நான் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வேன் என்று ஃப்ராட்டரோலி பேசியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |