அதிர்ச்சி…ராணி இறப்பதற்கு சில நாட்களுக்கு முன் அவர் மனதை சுக்குநூறாக்கிய ஒரு மரணம்!
ராணியார் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர் அவர் செல்லமாக வளர்த்த நாய் மரணமடைந்து விட்டதாம்.
கேண்டி என்ற அந்த நாயின் மரணம் ராணியாரின் மனதை உலுக்கியதாக ஒரு தகவல் வைரலாகி வருகின்றது.
செல்லப்பிராணிகள் மீது ராணியாருக்கு எப்போதுமே மிகவும் பிரியம் இருந்தது.
அதன்படி 4 dorgi வகை நாய்களை அவர் வளர்த்து வந்தார். அதில் கேண்டி என்ற பெயருடைய நாய் 2004ஆம் ஆண்டு முதல் ராணியிடம் இருந்த நிலையில் தனது 18வது வயதில் சமீபத்தில் உயிரிழந்தது.

அதுவும் ராணியார் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர் தான் கேண்டி உயிரிழந்தது. என்ன தான் கேண்டி அதிக வயது வரை வாழ்ந்து மரணித்திருந்தாலும் அந்த மரண செய்தி ராணியார் மனதை மிகுந்த வேதனையில் ஆழ்த்தி அவர் மனதை உலுக்கியிருக்கிறது.
பொதுவாக ராணியார் வளர்க்கும் நாய் எந்த இடத்தில் இறக்கிறதோ அங்கு தான் புதைக்கப்படும். ஆனால் கேண்டி விண்ட்சருக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த 2020ல் உயிரிழந்த வுல்கன் என்ற நாயுடன் சேர்ந்து கேண்டி புதைக்கப்பட்டிருக்கிறது.