தங்க செயின் அணிவித்து நாய்க்கு அரங்கேறிய வளைகாப்பு! வைரலாகும் காணொளி
கடலூர் முதுநகர் அருகே வீட்டில் வளர்க்கும் நாய்க்கு வளைகாப்பு நடத்திய சம்பவம் சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாகி வருகிறது.
செல்லப்பிராணியாக வளரும் நாய்
இன்று பல வீடுகளில் உரிமையாளர்களுக்கு பெரிதும் காவலாக இருப்பது வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகள் தான்.
உரிமையாளரால் செல்லமாக வளர்க்கப்படும் செல்லப்பிராணிகள் வளர்ப்பு பிள்ளையாகவே மாறிவிடுகின்றது.
இதனால் அதிக பிரியம் வைத்திருக்கும் நிலையில், செல்லப்பிராணிகளுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி கூட நடத்தி மகிழ்ந்து வருகின்றனர்.
கணவருடன் பயங்கர ரொமான்ஸில் தாமரை! வாயடைத்துப் போன ரம்யாகிருஷ்ணன்
நாய்க்கு நடந்த வளைகாப்பு
கடலூர் முதுநகர் அருகே காரைக்காடு மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர், சங்கர் இவரது மனைவி ஜீவா. சங்கர் கடலூர் சிப்காட்டில் உள்ள, ஒரு தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார்.
இவர் தனது வீட்டில் ஜெர்மன் ஷெப்பர்ட் வகையை சேர்ந்த, ஒரு நாய்க்கு ஜாக்கி என்று பெயரிட்டு கடந்த 2 ஆண்டுகளாக வளர்த்து வருகிறார்.
இந்நிலையில் ஜாக்கி தற்போது கர்ப்பமாக உள்ள நிலையில், அதற்கு வளைகாப்பு நடத்த ஏற்பாடு செய்ததுடன், சீர்வரிசைகள் வைத்து கழுத்தில் தங்க சங்கிலி மற்றும் மாலை அணிவித்து, நலுங்கு வைத்து ஆசீர்வாதம் செய்துள்ளனர்.