படமெடுத்து நின்ற பாம்பு! வீட்டிற்குள் நுழையாமல் தடுக்க போராடும் நாய்
நல்ல பாம்பு ஒன்று வீட்டிற்குள் செல்ல முயன்ற போது, இதனை அவதானித்த நாய் அதனை தாக்கி கடுமையாக போராடிய காட்சியை இங்கு காணலாம்.
பொதுவாக பாம்பு என்றாலே படையே நடுங்கும் என்ற பழமொழி உண்டு. ஆம் அதிக விஷத்தன்மை கொண்ட பாம்பு மனிதர்களைக் கடித்தால் சில நிமிடங்களில் உயிரிழக்க நேரிடும்.

தற்போது அநேக வீடுகளில் செல்லப்பிராணிகளை வளர்த்து வருவதை நாம் பார்க்க முடிகின்றது. இவ்வாறு வளர்க்கப்படும் பிராணிகள் தனது எஜமானுக்கு மிகவும் நன்றியுள்ளதாகவே இருக்கின்றது. இக்கட்டான சூழ்நிலையில் தனது உயிரைக் கொடுத்து எஜமானைக் காப்பாற்றும் காட்சியையும் அவ்வப்போது அவதானித்து வருகின்றோம்.
இங்கு வீட்டிற்குள் நல்ல பாம்பு ஒன்று நுழைவதை அவதானித்த, வளர்ப்பு நாய் குறித்த பாம்பிடம் பயங்கரமாக சண்டையிட்டு இறுதிவரை வீட்டிற்குள் செல்லவிடாமல் தடுத்துள்ளது. இக்காட்சி காண்பவர்களை நெகிழ வைத்துள்ளது.