தெருவில் சிறுமியை கொடூரமாகத் தாக்கிய நாய்! ஓடிவந்த தாய் செய்த தரமான சம்பவம்
தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை நாய் ஒன்று கடித்துக் குதறிய சம்பவம் காணொளியாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிறுமியை தாக்கிய நாய்
குஜராத்தின் ஹன்ஸ்புரா மாவட்டம் சூரத்தில் வீட்டிலிருந்து தெருவிற்கு விளையாட வந்த சிறுமி ஒருவரை நாய் ஒன்று கொடூரமாக தாக்கியுள்ளது.
முதலில் சிறுமியின் தலைமுடியைப் பிடித்து கீழே தள்ளிய நாய் பின்பு, அந்த குழந்தையை புரட்டி எடுத்து தாக்குதல் நடத்தியுள்ளது.
சிறுமியின் கதறல் சத்தம் கேட்டு வெளியே வந்த தாய் சாதூர்யமாக சிறுமியைக் காப்பாற்றினார். ஆனால் குறித்த நாய் தாயையும் தாக்குவதற்கு முனைந்துள்ளது.
பொதுவாகவே உத்தர பிரதேசம் மற்றும் டெல்லியை சுற்றிய பகுதிகளில் தெரு நாய்கள் அதிகமாக இருந்து வரும் நிலையில், இந்த தாக்குதல் பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
நாய் தாக்கியதில் பலத்த காயம் அடைந்த சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கக்ப்பட்டதோடு, அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டுள்ளது. குறித்த சிசிடிவி காட்சி வெளியாகி கடும் அதிர்ச்சி கொடுத்துள்ளது.
સુરતમાં બાળકી પર હડકાયું શ્વાન તૂટી પડ્યું, ગાલે બચકાં ભરી કરડી ખાતાં હોસ્પિટલમાં દાખલ #surat #dogs #streetdog pic.twitter.com/xNtzXOIlD2
— Gujarat Tak (@GujaratTak) January 9, 2023