வெந்நீர் குடிப்பதால் உடல் எடையை குறைக்க முடியுமா? இனிமேல் மிஸ் பண்ணாதீங்க

Vinoja
Report this article
வெந்நீரைக் குடிப்பதால் நம் உடலில் உள்ள நச்சுத்தன்மையும், உடலில் உள்ள நச்சுப் பொருள்களும் வெளியேறும் என்பது அனைவரும் அறிந்ததே.
அந்த வகையில், அதிக கொழுப்பை குறைக்க சூடான நீர் பயனுள்ளதாக இருக்கும் என பல ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. இதிலுள்ள வெப்பம் உடலுக்கு எண்ணற்ற ஆரோக்கியத்தை கொடுக்கின்றது.
அதுமட்டுமன்றி கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த சூடான நீர் உதவுகிறது. இது இரத்த நாளங்களை சுத்திகரிக்கும் செயற்பாட்டையும் சிறப்பாக செய்கின்றது.
வெந்நீர் குடிப்பதன் நன்மைகள்
இது போன்று சூடான நீர் என்னென்ன நன்மைகளை உடலுக்கு வழங்குகின்றது என தெரிந்து கொள்வோம். இதய நோயைக் கட்டுபடுத்துமா? நம் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் “எல்டிஎல் ” என்றும் நல்ல கொலஸ்ட்ரால் “ எச்டிஎல் ” என்றும் அழைக்கப்படுகிறது.
உடற்பயிற்சி கொழுப்பைக் குறைக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வாரத்திற்கு 5 முறை ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வது அல்லது வாரத்திற்கு 3 முறை அதாவது 20 நிமிடங்கள் தீவிரமாக உடற்பயிற்சி செய்வது உடல் கொழுப்பை குறைக்கும்.
நடைபயிற்சி என்பதும் கொலஸ்ட்ராலைக் குறைப்பதோடு மட்டுமல்லாமல், இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் உதவும் ஒரு சிறந்த பயிற்சியாகும்.
இந்த பயிற்சிகளுடன் தினசரி சூடான நீரை பருகுவதனால் இலகுவில் கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தக் கூடியதாக இருக்கும்.
நிறைய வெதுவெதுப்பான தண்ணீர் குடிப்பது இதய நோயைக் குறைக்க உதவுகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |