பிரபலங்களின் சரும பராமரிப்பு ரகசியம்! பீட்ரூட் ஜூஸ் உண்மையாகவே சருமத்தைப் பளபளப்பாக்குமா?
பொதுவாகவே ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி தங்களை அழகாக காட்டிக்கொள்ள வேண்டும் என்பதில் அதிக ஆர்வம் இருக்கும்.
ஆனால் தற்காலத்தில் அதிகரித்து வரும் சூழல் மாசு, துரித உணவுகளின் அதிகரித்த நுகர்வு, போதிய உடற்பயிற்சியின்மை, ரசாயனம் கலந்த அழகு சாதன பொருட்களின் பாவனை அதிகரித்தமை போன்ற பல காரணங்களால் பெரும்பாலானவர்களின் சருமம் இயற்கை பொலிவை இழந்துவிட்டது என்றால் மிகையாகாது.

அப்படி இழந்த சரும பொலிவை மீட்டு, பளபளபப்பான சருமத்தை இயற்கையாகவே பெற பீட்ரூட் ஜூஸ் எவ்வாறு பயனளிக்கும் என்பது குறித்த விரிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
சரும பராமரிப்பில் பீட்ரூட் ஜூஸ்
பொதுவாக பீட்ரூட் என்றாலே இனிக்கும் என்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் இந்த காய்கறியை அனைவருக்கும் பிடிக்கும்.

பீட்ரூட்டை மற்ற சமயங்களில் சாப்பிடுவதை விடவும் குளிர்காலங்களில் அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
பீட்ரூட் ரத்தத்தை அதிக அளவில் உற்பத்தி செய்யவும் ஈமோகுளோபின் அளவை அதிகரிப்பதிலும் பெரும் பங்கு வகிக்கின்றது.

குறிப்பாக பீட்ரூட்டில் லைகோபீன் மற்றும் ஸ்குவாலேன் உள்ளிட்ட சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் கலவைகள் உள்ளதால், இது சரும பராமரிப்பில் பெரும் பங்கு வகிக்கின்றது.
அதில் காணப்படும் விசேட வேதியல் கலவைகள் ஆன்டி-ஏஜிங் விளைவுகளை கொண்டிருப்பதோடு, முக சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களை குறைப்பதிலும் ஆற்றல் காட்டுகின்றது.
எனவே சருமத்தை பளபளப்பாகவும், பொலிவாகவும் வைத்திருக்க விரும்பினால், தினசரி ஒரு கிளாஸ் பீட்ரூட் ஜூஸ் குடிப்பதை வழக்கமாக்கிக்கொள்ளலாம்.

இந்த பழக்கம் சருமம் இழந்த அழகை இயற்கையாகவே மீட்டெடுக்க பெரிதும் துணைப்புரியும். பீட்ரூட் ஜூஸ் நம் சருமத்தை மிருதுவாகவும், இயற்கையாகவே பொலிவாகவும் மாற்றுவதில் பெரிதும் ஆற்றல் கொண்டது.
அதன் காரணமாகவே சரும பராமரிப்பு உற்பத்திகளில் பீட்ரூட் முக்கிய இடம் வகிக்கின்றது. மேலும் சருமம் மற்றும் உடலை ஹைட்ரேட்டாக வைத்துக்கொள்ளவும்,சருமத்தையும் உடலையும் ஆரோக்கியமாக வைத்திருக்கவும் பீட்ரூட் ஜூஸ் ஒரு சிறந்த தெரிவாக இருக்கும்.

தினசரி பீட்ரூட் ஜூஸ் பருகுவமதால், முகத்தில் உள்ள பருக்கள் மற்றும் பிற பிரச்சனைகள் குறைகிறது. மேலும் பீட்ரூட் ஜூஸில் கணிசமான அளவு வைட்டமின் சி இருப்பதால், இது சருமத்தில் பிக்மென்டேஷனை குறைத்து நீண்ட காலம் வரை இளமையான தோற்றத்தை கொடுக்கும்.
நடிகை தீபிகா படுகோண், நடிகர் சரத்குமார் , நடிகை கரினா கபூர் உட்டிபட பல சினிமா பிரபலங்களும் இந்த முறையில் தங்களின் சருமத்தை பாதுகாப்பதாக அவர்களே கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |