கோடிகளில் புரளும் மகன்கள்.. நயன்,விக்கி இருவரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
நயன்,விக்கி இருவரின் சொத்து மதிப்பு பற்றிய தகவல் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
லேடி சூப்பர் ஸ்டார்
தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் தான் நடிகை நயன்தாரா.
இவருக்கு இணையாக இன்று வரை தமிழ் சினிமாவில் யாரும் இல்லை என சினிமா வட்டாரங்கள் முனுமுனுத்து வருகிறார்கள்.
இவர் தமிழ் சினிமாவில் இருக்கும் அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்த இவர், சுமார் 20 வருடங்களுக்கு மேலாக சினிமாவில் நடித்து வருகிறார்.
காதல் திருமணம்
இதனை தொடர்ந்து,“ நானும் ரௌவுடி தான்” திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள்.
இந்த நிலையில் தற்போது இவர்களுக்கு அழகிய இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கிறார்கள்.
டுவிட்டர் பக்கம் ஆக்டிவாக இருந்த நயன்தாரா தற்போது இன்ஸ்டா பக்கத்திற்கு என்றி கொடுத்துள்ளார்.
இதனை தொடர்ந்து கோலிவுட்டிலிருந்து நயன்தாரா பாலிவுட்டிற்கு சென்றுள்ளார்.
சொத்து மதிப்பு
டாப் நடிகைகளாக இருக்கும் பிரியங்கா சோப்ரா மற்றும் தீபிகா படுகோனே இவர்களுக்கு அடுத்து அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையாக நயன்தாரா வாங்குகிறார்.
இதன்படி, நயன்தாராவின் சொத்துக்கள் ரூ.165 கோடி இருக்கும் எனவும் ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை விக்னேஷ் சிவனுடன் சேர்ந்து நிறுவியுள்ளார்.
எனவே இருவரது சொத்து மதிப்பையும் சேர்த்து பார்த்தால் ரூ.250 கோடி தாண்டும் எனவும் சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், “20 வருடங்கள் சினிமாவிலிருக்கும் நயனிற்கு இவ்வளவு தான் சொத்துக்கள் உள்ளதா?“ என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |