குழந்தையுடன் சாமி தரிசனம் செய்த ப்ரியங்கா சோப்ரா - வைரலாகும் புகைப்படம்
குழந்தையுடன் சாமி தரிசனம் செய்த ப்ரியங்கா சோப்ராவின் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
நடிகை ப்ரியங்கா சோப்ரா
நடிகர் விஜய்யின் 'தமிழன்' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பிரியங்கா சோப்ரா. இதனையடுத்து, பாலிவுட்டில் பிரபல நட்சத்திர நடிகையாக வலம் வந்தார்.
திருமணம்
இவர் தன்னை விட 10 வயது குறைந்த நிக் ஜோன்ஸ் என்பவரை கடந்த 2018ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்தார். இத்தம்பதியினருக்கு கடந்த ஆண்டு வாடகைத்தாய் மூலம் பெண் குழந்தை பெற்றுக்கொண்டனர்.
குழந்தை முகத்தை காட்டிய ப்ரியங்கா
சமீபத்தில் லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த ஒரு நிகழ்வில் ப்ரியங்கா சோப்ரா, அவரது கணவர் நிக் ஜோனாஸ் கெவின் கலந்து கொண்டனர். அப்போது, தன் மகள் மால்டி மேரியின் முகத்தை முதல் முறையாக உலகத்திற்கு காட்டினார்.
குழந்தையுடன் சாமி தரிசனம் செய்த ப்ரியங்கா
இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது.
அந்த புகைப்படத்தில்,
பிரியங்கா சோப்ரா, தன்னுடைய மகள் மால்டி மேரியுடடன் சித்திவிநாயகர் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். தற்போது இது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்த புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் குழந்தை ரொம்ப அழகாக, அமைதியாக, ஆர்வமாகவும் காணப்படுகிறாள் என்று ஆச்சரியத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.
#PriyankaChopra takes daughter #MaltiMarie for darshan to #SiddhivinayakTemple, seeks blessings; fans are amazed by how 'remarkably calm and curious at the same time' the little one looks@priyankachopra #Mumbai #PriyankaChopraJonas #Siddhivinayak pic.twitter.com/Q6dE13zegg
— HT City (@htcity) April 7, 2023