சிம்(SIM) கார்டில் ஒருமுனை மட்டும் வெட்டப்பட்டிருப்பது ஏன்? காரணம் இதோ
நாம் செல்போனில் பேசுவதற்கு பயன்படுத்தும் சிம் கார்டின் ஒருமுனை மட்டும் வெட்டப்பட்ட டிசைன் எதற்காக என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
இன்றைய காலத்தில் செல்போன் என்பது ஒரு நபரின் அத்தியாவசிய தேவையில் ஒன்றாகவே மாறியுள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் செல்போன் பயன்படுத்தி வருகின்றனர்.
செல்போனுக்கு உயிர் கொடுப்பது பேட்டரி என்று கூறப்பட்டாலும், நாம் மற்றவர்களிடம் பேசுவதற்கு அதில் சிம் கட்டாயம் போட வேண்டும். சிம் இல்லையென்றால் நாம் வாங்கும் போனுக்கு எந்தவொரு பயன்பாடு இல்லை என்று தான் கூற வேண்டும்.
ஆனால் சிம் கார்டு செவ்வக வடிவத்தில் இருந்தாலும் அதன் ஒரு முனை மட்டும் வெட்டப்பட்டிருக்கும். இதற்கு காரணம் நம்மில் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தற்போது எதற்காக அவ்வாறு வெட்டப்பட்டுள்ளது என்பதை தெரிந்து கொள்வோம்.

சிம்-மில் வெட்டப்பட்ட ஒருமுனை
நாம் ஒரு பொருளை தொடர்ந்து பயன்படுத்தி வந்தாலும், அதன் வடிவமைப்பிற்கு பின்னே இருக்கும் உண்மையை அறிந்து கொள்வதில்லை. ஆரம்பத்தில் சிம் கார்டுகள் செவ்வக வடிபத்தில் தான் இருந்துள்ளது.
ஆதலால் சிம் கார்டை சொருகுவதில் பலருக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளதுடன், தலைகீழாக சொருகுவதா? அல்லது நேராக சொருக வேண்டுமா என்பதில் குழப்பம் ஏற்பட்டது. அதுமட்டுமின்றி எந்த பக்கத்தினை உள்ளே வைக்க வேண்டும் என்பதும் தெரிவதில்லை.

இதனால் தலைகீழாக சொருகி வைக்கப்படும் சிம் கார்டு வேலை செய்யாமலும், மொபைலில் நெட்வொர்க் கிடைக்காமலும் இருக்கும். சில தருணங்களில் சிம் கார்டு சேதமடையவும் செய்கின்றது.
இந்த குழப்பங்களைத் தீர்ப்பதற்கு, சரியான முறையில் சிம் கார்டு போடப்பட்டுள்ளதை உறுதி செய்வதற்கு இவ்வாறு ஒருமுனையை வெட்டும் யோசனை வந்துள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த முனையானது மொபைல் ஸ்லாட்டில் உள்ள வடிவத்துடன் ஒத்துப்போவதால், தவறாக சிம் கார்டு சொருகாமல் சரியாக சொருகி பயன்படுத்துவார்கள்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |