பூரி, சப்பத்திற்கு சுவையான பன்னீர் புர்ஜி... வெறும் 10 நிமிஷம் போதும்
Paneer Bhurji Masala Recipe: பன்னீர் விரும்பி சாப்பிடுபவர்கள் பன்னீர் புர்ஜி கிரேவியை வெறும் 10 நிமிடத்தில் செய்து சாப்பிடலாம்.
பொதுவாக காலை உணவு என்பது சத்தானதாக இருக்க வேண்டும். சத்துக்கள் நிறைந்த உணவுகளை காலையில் எடுத்துக் கொள்வதால் உடல் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கும்.
அந்த வகையில் காலையில் இட்லி, தோசை இவற்றினை மட்டும் எடுத்துக் கொள்பவர்கள் புரதச்சத்து நிறைந்த உணவினை காலையில் கட்டாயம் சேர்க்க வேண்டும்.
அவ்வாறு புரதச்சத்து நிறைந்த உணவாக இருக்கும் பன்னீர் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடுகின்றனர். அந்த வகையில் பன்னீரை பர்ஜி கிரேவியாகவும் செய்து சாப்பிடலாம்.
இவை சப்பாத்தி, பூரி, நாண் இவற்றிற்கு அட்டகாசமான சுவையாக இருக்கும். அவ்வாறு ஹோட்டல் ஸ்டைலில் பன்னீர் புர்ஜி எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்
2 ஸ்பூன் எண்ணெய்
1 ஸ்பூன் வெண்ணெய்
1 ஸ்பூன் சீரகம்
1 பெரிய வெங்காயம், பொடியாக நறுக்கியது
1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
¼ ஸ்பூன் மஞ்சள் தூள்
1 ஸ்பூன் மிளகாய்த்தூள்
½ ஸ்பூன் சீரகத்தூள்
1 ஸ்பூன் கொத்தமல்லித்தூள்
தேவையான அளவு உப்பு
1 ஸ்பூன் கடலை மாவு
3 தக்காளி, பொடியாக நறுக்கியது
½ குடைமிளகாய், பொடியாக நறுக்கியது
1 கப் தண்ணீர்
200 கிராம் பனீர், உதிர்த்தது
½ ஸ்பூன் கரம் மசாலா
1 ஸ்பூன் கசூரி மேத்தி, பொடியாக நறுக்கியது
2 ஸ்பூன் கொத்தமல்லி, பொடியாக நறுக்கியது

செய்முறை
முதலில் கடாய் ஒன்றில் எண்ணெய் மற்றும் வெண்ணெய் சேர்த்துக் கொள்ளவும். இதனுடன் சீரகம் சேர்த்து லேசாக வறுத்துக் கொள்ளவும்.
இதனுடன் பெரிய வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். அடுப்பினை மிதமான தீயில் வைத்துவிட்டு, மேலும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகத் தூள், மல்லித்தூள், தேவையான அளவு உப்பு மற்றும் கடலை மாவு சேர்த்துக் கொள்ளவும்.

நன்றாக கிளறிவிட்டு, இதனுள் தக்காளி சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். தக்காளி மென்மையாக குழைந்து வரும் வரை வதக்கி, பின்பு குடைமிளகாய் சேர்த்து நன்றாக வதக்கிவிட்டு 1 கப் தண்ணீர் சேர்க்க வேண்டும்.
நன்றாக கொதித்து வந்ததும், பன்னீரை நன்றாக உதிர்த்து இதனுடன் சேர்க்கவும். சுமார் 2 நிமிடம் மிதமான தீயில் வேக வைக்கவும்.
பின்பு கரம்மசாலா மற்றும் கஸ்தூரி மேத்தி மற்றும் கொத்த மல்லி இலைகளை சேர்த்து நன்றாக கிளறி இறக்கினால் சுவையான பன்னீர் புர்ஜி கிரேவி தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |