பித்ரு தோஷம் நீங்க வேண்டுமா? அமாவாசையன்று இதை செய்தால் போதும்
எமது இறந்துபோன முன்னோர்களின் ஆசி எமக்கு அமாவாசை கிடைக்கும் இத் தினத்தில் பித்துரு தோஷம் இருப்பவர்கள் சில பரிகாரங்களை செய்தால் பித்ரு தோஷத்தில் இருந்து விடுபடலாம்.
பித்ரு தோஷம்
நமது வீட்டில் இறந்த முன்னோர்கள் இருப்பின் அவர்களை கண்டுகொள்ளாமல் விடும் சமயத்தில் வீட்டில் செல்வம், பணம் போன்ற பல பிரச்சனைகள் வரும் இதையே பித்ரு தோஷம் என கூறுவார்கள்.
இந்த தோஷம் நீங்க சில பரிகாரங்களை அமாவாசை தினத்தன்று செய்தால் பலன் தரும். அமாவாசை தினத்தன்று இறந்த முன்னோர்களின் ஆசி கிடைக்கும் என்பது நம்பிக்கையாகும்.
இந்த நாளில் அரச மரத்திற்கு சில பொருட்களை கொண்டு அர்ச்சனை செய்தால் பித்ரு தோஷம் நீங்கும் என வாஸ்து ஆலோசகர் கூறியுள்ளார்.
அதாவது செம்பு பாத்திரத்தில் அரச மரத்திற்கு பால் ஊற்றினால், ஜாதகத்தில் அவரது நிலை வலுவடையும் என்று சொல்லப்படுகிறது. இதே போன்று அரச மரத்திற்கு எள்ளை நிவேதனம் செய்வது மங்களகரமானதாக கருதப்படுகிறது.
இந்து நம்பிக்கையின்படி அரசு மரத்திற்கு எள்ளை வழங்குவது வீட்டில் நேர்மறை எண்ணங்களை அதிகரிக்கும்.
பித்ரு தோஷமும் நீங்கும். அரச மரத்திற்கு நீர் ஊற்றி குளிர்விப்பது பித்ருக்களை மகிழ்ச்சியாக்குவதற்கு சமமாகுமாம். இதை செய்வதன் மூலம் உங்கள் வீட்டில் அனைவருக்கும் மகிழ்ச்சி பெருகும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |