திருமண வாழ்வில் இதையெல்லாம் பெருசு படுத்தாதீங்க...
திருமண உறவில் நிச்சயம் பல விட்டுக்கொடுத்தலும், ஒருவரை ஒருவர் புரிந்துகொள்வதும் முக்கியம்.
அந்த வகையில் சில சிறு சிறு விடயங்களை அதன் போக்கிலேயே விட்டுவிட வேண்டும். அதை பெரிதுபடுத்திவிடக் கூடாது. அவை என்னவென்று பார்ப்போம்.
image - Time for Marriage
வினோதங்கள்
சிலருக்கு நித்திரையில் குறட்டை விடும் பழக்கம் உள்ளது. இது திருமணத்தின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாதிக்காது.
எனவே இவற்றை பெரிதுபடுத்தாமல் இருப்பது நல்லது. அனைவருக்குள்ளும் சில குறைகள் உள்ளன. அவற்றை பெரிதுபடுத்தாமல் இருப்பதே திருமண வாழ்க்கைக்கு நல்லது.
தனிப்பட்ட பொழுதுபோக்கு மற்றும் ஆர்வம்
கணவன் மனைவி இருவருக்கும் அவரவருக்கென்று தனிப்பட்ட பொழுதுபோக்குகள் இருக்கும்பட்சத்தில் அதை தங்களுக்குள் பகிர்ந்துகொள்ள வேண்டியது அவசியமாகும். சிறந்த புரிதல் மற்றும் ஒருவரின் பொழுதுபோக்கிற்கு மற்றொருவர் கொடுக்கும் ஆதரவு என்பன தம்பதிகளுக்கிடையிலான நெருக்கத்தை அதிகரிக்கும்.
image - Project Hot Mess
கழிவறையை சரியாக பயன்படுத்தாமை
தம்பதிகளில் ஒருவர் கழிவறையை சரியாக பயன்படுத்தாவிட்டால் அந்த விடயத்தை பெரிதுபடுத்தி, துணையை சங்கடத்துக்கு உள்ளாக்கிவிடக் கூடாது. ஏனென்றால் இது பொதுவாக அனைத்து வீடுகளிலும் இருக்கும் பிரச்சினையாகும்.
வேறுபாடுகள்
கணவன் மனைவி என்றவுடன் இருவருக்கும் ஒரே மாதிரியான விருப்ப வெறுப்புக்கள்தான் இருக்க வேண்டும் என்றில்லை. விரும்பிய திரைப்படங்கள், இசை என்று விருப்பங்களில் வேறுபாடுகள் காணப்படலாம். இந்த வேறுபாடுகளை மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.
image - istock