மட்டன் சாப்பிட்ட பின்பு எந்த உணவுகளை சாப்பிடக்கூடாது? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க
மட்டன் சாப்பிட்ட பின்பு நாம் எடுத்துக் கொள்ளக்கூடாத உணவுகளைக் குறித்தும், அதற்கான காரணத்தை குறித்தும் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பொதுவாக ஞாயிற்று கிழமை வந்துவிட்டாலே அசைவ பிரியர்களுக்கு பிடித்தமான உணவுகளை வீட்டில் சமைத்து வைப்பார்கள். சிலருக்கு கடல் வகை உணவுகள், சிலருக்கு சிக்கன் வகைகள், காடை என பிடிக்கும்.
உடம்பிற்கு ஆரோக்கியத்தை அளிக்கும் மட்டனையும் பல அசைவப்பிரியர்கள் விரும்பி சாப்பிடுகின்றனர். இந்நிலையில் மட்டன் சாப்பிட்ட பின்பு எந்தெந்த உணவுகளை சாப்பிடக்கூடாது என்பதையும், எதற்காக சாப்பிடக்கூடாது என்ற காரணத்தையும் இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மட்டன் சாப்பிட்ட பின்பு எதை சாப்பிடக்கூடாது?
மட்டன் அல்லது சிக்கன் இவற்றினை சாப்பிடுவதற்கு முன்னும், பின்னும் பால் குடிப்பதை தவிர்க்கவும். இவை செரிமான பிரச்சனையை ஏற்படுத்துகின்றது. எனவே மட்டன் சாப்பிட்ட பின்பும் தயிர் மற்றும் மோர் இவற்றினையும் அதிகமாக உட்கொள்ளக்கூடாது. செரிமானத்தை மேம்படுத்த மிளகு ரசம் சேர்க்கலாம்.

தேன் சாப்பிட்ட பின்பு மட்டன் சாப்பிடக்கூடாது. ஏனெனில் மட்டன் மற்றும் தேன் இரண்டும் நமது உடம்பில் வெப்பத்தை உருவாக்கி உடம்பிற்கு தீங்கு ஏற்படுத்திவிடும்.
அதே போன்று மட்டன் சாப்பிட்ட பின்பு தேநீர் குடிப்பதை தவிர்க்கவும். ஏனெனில் இவை செரிமானம் மற்றும் நெஞ்செரிச்சலை ஏற்படுத்தும் கலவை ஆகும்.

மட்டன் சாப்பிட்ட பின்பு காரமான உணவுகள், சர்க்கரை உணவுகளை தவிர்க்கவும். ஏனெனில் இவை வயிறு நிறைந்த உணர்வை கொடுத்து, மந்தப்படுத்தும்.
மட்டன் மெதுவாக செரிமானம் ஆகும் உணவாகும். இதனை சாப்பிட்ட பின்பு செரிமானத்திற்கு வாழைப்பழம் சாப்பிட்டால் வாயு தொந்தரவுகளை ஏற்படுத்தும்.

முடிந்த வரை மட்டன் சாப்பிட்ட பின்பு அதிகமான தண்ணீர் குடிக்கவும். உடனே படுக்கைக்கு செல்லாமல் சிறிது தூரம் நடக்கவும். அதே போல் மாலையில் வெதுவெதுப்பான பெருஞ்சீரக தண்ணீர், இஞ்சி சேர்க்கப்பட்ட மூலிகை தேநீர் இவற்றினை பருகலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |