நிம்மதியான உறக்கம் வேண்டுமா...அப்போ இதையெல்லாம் சாப்பிடாதீங்க!
தூக்கம் ஒரு மனிதனுக்கு மிகவும் முக்கியமானது. ஏனென்றால் தூங்கும் நேரத்தில் மட்டும்தான் நமது உடலும் மனதும் ஓய்வாக இருக்கும்.
ஆனால், நம்மில் பலருக்கு நிம்மதியான தூக்கம் வருவதில்லை. இது மனம், உடல் என இரண்டையும் பாதிக்கும்.
உறக்கம் விடயத்தில் நாம் உண்ணும் உணவும் முக்கிய பங்காற்றுகின்றது. அவை என்னவென்று பார்ப்போம்...

image - Vitacost
திரவ உணவுகள்
இரவில் நித்திரைக்குச் செல்லும்போது திரவ உணவுகள் உட்கொள்வதை நிறுத்த வேண்டும். ஏனென்றால் திரவ உணவுகள் உட்கொண்டால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டி வரும்.
காஃபின்
இரவு நேரங்களில் தேநீர் மற்றும் காபி குடிப்பதை நிறுத்த வேண்டும். ஏனென்றால் இனிப்பானவற்றை உட்கொள்ளும்போது அது ஹோர்மோன்களைத் தூண்டுகிறது.

image - CNBC
எளிதாக ஜீரணமாகக்கூடிய உணவுகள்
இரவில் ஜீரணமாக இலகுவாக இருக்கக்கூடிய உணவுகள் உட்கொள்வதே நல்லது. இல்லையென்றால் கடினமான உணவுகளை உட்கொள்ளும்போது அது செரிமான அமைப்பில் பாதிப்பை ஏற்படுத்தும்.