வெள்ளிக்கிழமைகளில் மறந்தும் இதை செய்யாதீர்கள்...துளிக் கூட பணம் தங்காது? லட்சுமி தேவியின் கோபம் அதிகரிக்கும்
ஜோதிட சாஸ்திரத்தில் வாரத்தின் ஒவ்வொரு நாளிலும் ஒருவர் என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது.
இதைப் பின்பற்றுவதன் மூலம் வீட்டில் சந்திக்கும் பல பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.
இப்போது வெள்ளிக்கிழமைகளில் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பதைப் பற்றி காண்போம்.

வெள்ளிக்கிழமைகளில் செய்ய வேண்டியவை
புதிய ஆடைகள் - புதிய ஆடைகளை வாங்க வேண்டுமென்று ஆசைப்பட்டால், வெள்ளிக்கிழமைகளில் சென்று வாங்குங்கள். லட்சுமி தேவிக்கு புதிய ஆடைகளை அணிவது பிடிக்கும்.

வாகனம் - வெள்ளிக்கிழமைகளில் வெள்ளை அல்லது சில்வர் நிற வாகனங்களை வாங்குவது நல்லது.

அலங்கார பொருட்கள் - வெள்ளிக்கிழமைகளில் கலை, இசை, கேட்ஜெட்டுகள், அலங்கார பொருட்கள் மற்றும் மேக்கப் பொருட்கள் போன்றவற்றை வாங்குவது நல்லது. ஏனெனில் இந்த பொருட்கள் அனைத்துமே லட்சுமி தேவியை மகிழ்விப்பதாக நம்பப்படுகிறது.

வெள்ளிக்கிழமைகளில் செய்யக்கூடாதவை
சொத்து தொடர்பான வேலை - வெள்ளிக்கிழமைகளில் சொத்து வாங்குவது நல்லதல்ல. அதோடு சமையலறை பொருட்கள் மற்றும் பூஜை சாமான்களை வாங்குவதையும் தவிர்க்க வேண்டும்.
பண பரிவர்த்தனை செய்யாதீர் - வெள்ளிக்கிழமை நாட்களில் எந்த ஒரு பண பரிவர்த்தனைகளையும் செய்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவ்வாறு செய்வதால் லட்சுமி தேவியின் கோபம் அதிகரிக்கும். இதனால் வீட்டில் பண குறைபாடு ஏற்பட்டு, பல பணம் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
சர்க்கரையை கொடுக்காதீர் - வெள்ளிக்கிழமை அன்று யாருக்கும் சர்க்கரையைக் கொடுக்காதீர்கள். இவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் ஜாதகத்தில் சுக்கிரன் பலவீனமாகிவிடுவார்.
சுக்கிரன் மகிழ்ச்சி, ஆடம்பரம் போன்றவற்றில் காரணி. சுக்கிரன் பலவீனமடைந்தால், வீட்டில் மகிழ்ச்சி, பணம் போன்றவை குலைவதோடு, அமைதியும் பாழாகும்.