Vastu Tips: இந்த பொருட்களை மற்றவர்களிடமிருந்து வாங்காதீங்க... துரதிர்ஷ்டம் துரத்துமாம்
வாஸ்து சாஸ்திரத்தின் படி மற்றவர்களின் வீட்டிலிருந்து சில பொருட்களை எடுத்துவருவது வீட்டிற்கு கஷ்டத்தை கொண்டுவருமாம்.
இந்து மதத்தில் வாஸ்து சாஸ்திரத்திற்கு என்று தனி சிறப்பு உண்டு. வீட்டில் ஒரு பொருட்களை வெளியே எடுத்துப் போடுவதும், வெளியே இருந்து ஒரு பொருட்களை வீட்டுக்கு கொண்டு வருவது அதிகமாக வாஸ்து பார்க்கப்படுகின்றது.
இந்த வாஸ்து சாஸ்திரங்கள் வீட்டில் உள்ளவர்களின் மீது ஆழமாக தாக்கத்தை ஏற்படுத்துவதுடன், உடல் மற்றும் மன ஆரோக்கியத்தையும் பாதிக்குமாம்.
வாஸ்து சாஸ்திரத்தின் படி, நீங்கள் மற்றவர்களின் வீட்டிலிருந்து உங்களது வீட்டிற்கு கொண்டுவரக் கூடாத சில பொருட்கள் குறித்து தெரிந்து கொள்வோம்.
இதனை நமது வீட்டிற்கு எடுத்து வந்தால் துரதிர்ஷ்டத்தையும், எதிர்மறையையும் கொண்டுவரும் என்று கூறப்படுகின்றது.
மற்றவர்களிடமிருந்து வாங்க கூடாத பொருட்கள்
ஒருவரிடமிருந்து குடையை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வரக்கூடாது. தவறுதலாக கூட மாற்றி எடுத்து வந்தால் கிரகங்களின் நிலை மோசமடைவதுடன், பல பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடுமாம்.
அடுத்தவர்களுடைய செருப்பை வீட்டிற்கு கொண்டு வரக்கூடாது. இதனால் சனி பகவானின் கோபம் அதிகரிக்குமாம்.
மற்றவர்களிடமிருந்து இரும்பு பொருளை ஒருபோதும் வீட்டிற்கு வாங்கிவரக்கூடாது. இரும்பு பொருளை கொண்டு வந்தால் சனியை வீட்டிற்கு கொண்டுவருவதாக அர்த்தம். இதனால் வீட்டில் மோதல், பண இழப்பு, எதிர்மறை போன்ற பிரச்சனை ஏற்படும்.
ஒருவர் வீட்டிலுள்ள தளபாடங்களை உங்களது வீட்டிற்கு எடுத்து வரக்கூடாது. இவை எதிர்மறை ஆற்றலை ஏற்படுத்தும்.
மற்றவர்கள் வீட்டிலிருந்து காலியான பாத்திரங்களை எடுத்து வருவதை தவிர்க்க வேண்டும். இதனால் குடும்பத்தின் செழிப்பு குறையுமாம்.
இதே போன்று கேஸ் அடுப்பு, மின்சார பொருட்கள் இவற்றினையும் எடுத்து வரக்கூடாது. வீட்டிற்கு ஆசீர்வாதங்கள் வருவது குறைவதுடன், வாழ்க்கையில் சோகம் வருவதற்கு வாய்ப்பு அதிகமாக உள்ளதாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
![முதன்முறையாக விமானத்தை ஓட்டும் பைலட்டின் சட்டை கிழிக்கப்படுவது ஏன்?](https://cdn.ibcstack.com/article/24b66abf-6677-459c-b9ce-1e1f33b18c9b/25-67ae080907cc3-md.webp)