வெளியில் தலைகாட்ட முடியாத பிரச்சனையா? அப்ப இந்த கிழமையில் மட்டும் இத செய்யுங்க!
செவ்வாய்க்கிழமை கிழமைகளில் அனுமனை வழிபடுபவர்களின் வாழ்வில் உள்ள பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி, அவர்களின் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும் என்பது ஐதீகம்.
செவ்வாய்க்கிழமை செவ்வாய் கிரகத்துடன் நேரடி தொடர்புடையது.
எனவே செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் செவ்வாய் கிழமைகளில் பரிகாரம் செய்வது நல்லது. இப்போது செவ்வாய்க்கிழமைகளில் செய்ய வேண்டிய சில பரிகாரங்களைக் காண்போம்.

எதிர்மறை ஆற்றல் நீங்க
செவ்வாய்கிழமைகளில் 4 பச்சை மிளகாய் மற்றும் ஒரு எலுமிச்சையை ஒரு நூலில் கோர்த்து, அதன் பின் 3 பச்சை மிளகாயை கோர்த்து, அதை வீட்டின் முன் அல்லது கடையின் முன் கட்டித் தொங்க விட வேண்டும்.
இப்படி செய்வதன் மூலம், அப்பகுதியைச் சுற்றியுள்ள எதிர்மறை ஆற்றல் நீங்கி, நேர்மறை ஆற்றல் நிறைந்து இருக்கும்.
திருமண தடைகள் நீங்க
செவ்வாய்க்கிழமைகளில் பசுவிற்கு வெல்லம் கொடுங்கள். இப்படி செய்வதனால் திருமணத்தில் வரும் தடைகள் நீங்கும்.
பணப்பற்றாக்குறையை சமாளிக்க
ஒரு ரூபாய் நாணயம் மற்றும் சிறு வெல்லத் துண்டை எடுத்து, சிவப்பு துணியில் கட்டி, பின் அதை லட்சுமி தேவியின் பாதத்தில் வைத்து வணங்க வேண்டும்.
பின்பு அதை எடுத்து பணம் வைக்கும் இடத்தில் வைக்க வேண்டும். இப்படி செய்வதனால் பணப்பற்றாக்குறை நீங்குவதாக நம்பப்படுகிறது.
கடன் தொல்லையில் இருந்து தப்பிக்க
கடன் பிரச்சனையால் சிரமப்படுபவர்கள் செவ்வாய்க்கிழமை அன்று அனுமனுக்கு வெல்லம் அல்லது இனிப்புக்களை வாங்கி கொடுங்கள். இப்படி செய்வதனால் கடன் பிரச்சனை நீங்கி வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.