வசமாக சிக்கிய மாதம்பட்டி ரங்கராஜ்! டிஎன்ஏ பரிசோதனையில் வெளியான உண்மை
பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா - சர்ச்சையில், சமீபத்தில் மாதம்பட்டி ரங்கராஜுக்கு மரபணு பரிசோதனை நடத்த அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், நீதிமன்ற உத்தரவின்படி, டிஎன்ஏ பரிசோதனை நடத்தப்பட்டது. பரிசோதனை முடிவில் மாதம்பட்டி ரங்கராஜ்தான் தந்தை என்பது நிரூபனம் ஆகியிருப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மாதம்பட்டி ரங்கராஜ்- ஜாய் கிரிஸில்டா
கடந்த ஆண்டில் இருந்தே இணையத்தில் பரபரப்பாக பேசப்படும் விடயம் என்றால், அது மாதம்பட்டிரங்கராஜ் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா இரண்டாம் திருமண சர்ச்சை தான்.
மாதம்பட்டி ரங்கராஜின் இரண்டாவது மனைவி ஜாய் கிரிஸில்டா அண்மையில், தன்னை மாதம்பட்டி ரங்கராஜ் திருமணம் செய்து, கர்பமாக்கிவிட்டு ஏமாற்றிவிட்டதாக மீடியாவிடம் எல்லா உண்மைகளையும் வெளிப்படையாக பேசியிருந்தார்.

முதல் மனைவி இருக்கும் போதே மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாம் திருமணம் செய்தது இவர் முதல் மனைவி உட்பட குடும்பத்தினர் அனைவருக்கும் தெரியும் என குறிப்பிடும் ஜாய் தன் குழந்தைக்கு நியாயம் வேண்டும் என இதுவரையில் போராடி வந்தார் என்பது அனைவரும் அறிந்ததே.
இவர்களின் வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நடந்துவரும் நிலையில், இந்த வழக்கு விசாரணையின் போது, தனது குழந்தையின் தந்தை மாதம்பட்டி ரங்கராஜ் என நிரூபிக்க, அவருக்கு மரபணு சோதனை நடத்தப்பட வேண்டும் என ஜாய் கிரிசில்டா தரப்பிலும், மரபணு சோதனைக்கு தயார் என மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து, தொடர்ந்து,மாதம்பட்டி ரங்கராஜுக்கு மரபணு பரிசோதனை நடத்த அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன் பிரகாரம், மரபணு பரிசோதனைக்குப் பின், அறிக்கையைப் பெற்று, அதனை மத்தியஸ்தரிடம் சமர்ப்பிக்கும்படி வழக்கறிஞர் ஆணையருக்கு உத்தரவிட்டு, இந்த வழக்கு விசாரணையை நீதிபதி மார்ச் 30 ஆம் திகதிக்கு தள்ளிவைத்தார்.
என்ஏ பரிசோதனை
இந்நிலையில், நீதிமன்ற உத்தரவின்படி, டிஎன்ஏ பரிசோதனை நடத்தப்பட்டது. அதன் முடிவில், மாதம்பட்டி ரங்கராஜ்தான் தந்தை என்பது நிரூபனம் ஆகியிருப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இன்று நான் நிற்கும் இடம், ஒரு தாய் போராட்டத்தின் சாட்சி… அவள் ஜெயித்ததற்கான நிரூபணம் என உருக்கமான பதிவுடன் ஜாய் கிரிஸில்டா தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |