வரலட்சுமியின் கசப்பான கடந்தகாலம்.. உடனே கட்டியணைத்த சினேகா- கண்ணீரில் அரங்கம்
DJD மேடையில் வரலட்சுமி சரத்குமார், அவருடைய கசப்பான கடந்த காலத்தை அழுதுக் கொண்டே கூறியுள்ளார்.
Dance Jodi Dance
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி Dance Jodi Dance.
இந்த நிகழ்ச்சியை இதுவரை காலமும் தொகுப்பாளர் விஜய் தொகுத்து வழங்கி வந்தார்.
இந்த சீசனில் விஜே மணிமேகலை மற்றுமொரு தொகுப்பாளராக இணைந்து பணியாற்ற ஆரம்பித்திருக்கிறார்.
அத்துடன் Dance Jodi Dance நிகழ்ச்சியின் நடுவர்களாக நடிகை சினேகா மற்றும் பாபா பாஸ்கர் மாஸ்டர் இருவரும் இருந்தார்கள். இந்த சீசனில் நடிகை வரலட்சுமி சரத்குமார் புதிய நடுவராக இணைந்துள்ளார்.
கசப்பான கடந்த காலம்
இந்த நிலையில், தற்போது DJD-ல் Endrendrum 80's Round சுற்று சென்றுக் கொண்டிருக்கிறது.
அப்போது நிகழ்ச்சியில் பெண் போட்டியாளர் ஒருவர் அவருடைய கடந்த காலத்தில் நடந்த கசப்பான சம்பவங்கள் குறித்து பகிர்ந்திருந்தார்.
அந்த சமயத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் வரலக்சுமி சரத்குமார் அவருடைய கடந்த காலம் பற்றி பேசியிருந்தார்.
அதில், “ என்னுடைய சிறுவயதில் என்னுடைய அம்மா- அப்பா இருவரும் என்னை ஒரு வீட்டில் விட்டுவிட்டு வேலைக்கு சென்று விடுவார்கள். அப்போது எனக்கு 4 தடவைகள் துஷ்பிரயோகம் நடந்துள்ளன. எனவே உங்களுடைய குழந்தைக்கு எது தவறான தொடுகை என கற்றுக் கொடுங்கள்..” என கண்ணீருடன் கூறியுள்ளார்.
இவற்றையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த சினேகா, வரலக்சுமியை உடனே கட்டியணைத்துக் கொண்டார். அத்துடன் அரங்கத்திலுள்ளவர்கள் அணைவரும் கண்ணீருடன் இருந்தனர்.
இப்படியாக இந்த வாரத்திற்கான ப்ரோமோ காட்சிகள் வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |