விஜய் மகனை தொடர்ந்து இயக்குநராகும் சூர்யா மகள்- பெருமிதத்தில் குடும்பத்தினர்
நடிகர் சூர்யா மகள்- தியா சினிமாவில் களமிறங்கியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் புகைப்படத்துடன் செய்தி வெளியாகியுள்ளது.
சூர்யா - ஜோதிகா
தமிழ் சினிமாவில் உள்ள நட்சத்திர ஜோடிகளில் சூர்யா - ஜோதிகா இவர்களும் அடங்குவார்கள்.
சுமாராக 4 வருடங்கள் காதலித்து பெற்றோர்கள் சம்பதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு தற்போது இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.
திருமணமாகி பல வருடங்கள் கடந்தாலும் சூர்யா - ஜோதிகாவின் காதல் விவாகரம் இன்றும் பேட்டிகளில் பேசப்படுகின்றன.
ஆரம்ப காலங்களில் சூர்யா - ஜோதிகாவின் காதலை சிவக்குமார் ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் பின்னர் 4 வருடங்களுக்கு பின்னர் ஏற்றுக் கொண்டதாகவும் ஒரு கதை உள்ளது.
தியாவின் சினிமா என்றி
இந்த நிலையில் நடிகர் சூர்யாவின் குழந்தைகளான தேவ்- தியா இருவரும் அடுத்தடுத்து சாதனைகளை செய்து வருகிறார்கள்.
அந்த வகையில், சூர்யா - ஜோதிகாவின் அன்பு மகள் தியா இயக்குநராகியுள்ளதாக சூர்யா பதிவொன்றை பகிர்ந்துள்ளார்.
அதில், "Leading Light - The Untold Stories of Women Behind the Scenes" என்ற ஆவண படத்தை தான் தியா இயக்கி இருக்கிறார்.
Triloka International Filmfare Awardsல் அந்த படம் திரையிடப்பட்ட நிலையில், அதற்கு இரண்டு விருதுகள் கிடைத்து இருக்கிறது.
சிறந்த screenwriter மற்றும் சிறந்த மாணவர் குறும்படம் ஆகிய பிரிவுகளில் விருது கிடைத்து இருக்கிறது.
இதற்காக சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் இன்ஸ்டாவில் பெருமிதத்துடன் பதிவிட்ட பதிவு வலைத்தளங்களிலுள்ள ரசிகர்களின் கவனத்திற்கு சென்றுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |