லட்டு விடுங்க இந்த தீபாவளிக்கு இந்த நெய் உருண்டை செய்ங்க - ரெசிபி இதோ
வீட்டில் தீபாவளிக்கு பல பலகாரங்கள் செய்து கொண்டு இருப்பீர்கள். இந்த கால கட்டத்தில் லட்டு செய்யமல் எப்படி. ஆனால் இந்த பூந்தி லட்டு ரவா லட்டு எல்லாம் சாப்பிட்டு சலித்திருக்கும்.
இதற்காக நெய் உருண்டை செய்தால் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். அதிலும் சுவை பிரமாதம். இதற்கு பாசி பருப்பு மற்றும் நெய் முலப்பொருளாக இருந்தால் போதும்.
சிறுவர்கள் முதல் பெரியோர் வரை அனைவரும் விரும்பி உண்ணும் நெய் உருண்டையை எவ்வாறு தயாரிக்கலாம் என்பதைப் பற்றி பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- பாசிப்பயறு - 2 கப்
- சர்க்கரை - 2 கப்
- நெய் - தேவைக்கேற்ப
- ஏலக்காய் - 6
- முந்திரிப்பருப்பு (உடைத்தது) - 50 கிராம்
செய்யும் முறை
முதலில் பாசிப்பயறை பொன்னிறமாக வறுத்து, சூடு ஆறிய பின்னர் அரைத்து, அதனை சலித்து வைத்துக்கொள்ளவும். அதேபோன்று சர்க்கரையையும் அரைத்து பயறு மாவுடன் கலந்துகொள்ளவும்.
இதனுடன் நெய்யில் வறுத்த ஏலக்காயையும் அரைத்து ஒன்றாகக் கலந்து கொள்ள வேண்டும்.
பின்னர் அகலமான பாத்திரமொன்றை எடுத்து, தேவையான அளவு நெய் ஊற்றி கலந்து வைத்துள்ள மாவையும் சேர்த்து கிளற வேண்டும்.
இதனுடன் நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பையும் கலந்து தேவையான உருண்டைகளைப் பிடித்தால், சுவை மிகுந்த நெய் உருண்டை தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |