தீபாவளிக்கு முன் குருவின் அதீத சக்தி பெறும் ராசிகள் - உங்க ராசி இருக்கா?
குரு தற்போது கடக ராசிக்குள் நுழைவதால் குறிப்பிட்ட 3 ராசிகள் எல்லா விதத்திலும் நன்மை பெறப்போகின்றது.
தீபாவளி குரு பெயர்ச்சி
குரு ஞானம், கல்வி, வேலை, செல்வம், திருமணம், தானம் போன்றவற்றின் காரண கர்தாவாக திகழ்கிறார். குரு பகவான் சனி கிரகத்தை விட தனது பயணத்தை மெதுவாக கொண்டு செல்வார்.
அந்த வகையில் அக்டோபர் மாதம் நிகழும் குரு பெயர்ச்சி மிகவும் சிறப்பு வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அதுவும் இந்த தீபாவளிக்கு முன்னர் குரு கடக ராசிக்குள் நுழைவார்.
இது பல ராசிகளுக்கு ஏற்ற தாழ்வுகளை கொடுத்தாலும் 3 ராசிகளுக்கு நல்வாழ்வை கொடுக்கப்போகின்றது அது எந்த ராசிகள் என்பதை பார்க்கலாம்.
கடக ராசி
கடக ராசிக்காரர்கள் குரு பெயர்ச்சியால் பல நன்மைகளை அடைவார்கள். தாங்கள் ஏதாவது வணிக தொடர்பில் இருந்தால் அதில் எதிர்பாராத முன்னேற்றம் கிடைக்கும். தற்போது உங்களுக்கு இருக்கும் வேலை மிகவும் பிடிக்க ஆரம்பிக்கும். இதனால் அத்துறையில் ஏதாவது சாதிப்பீர்கள். பணம் மகிழ்ச்சி என உங்கள் காட்டில் மழை போல நல்ல பலனை அனுபவிக்க போகிறீர்கள்.
கன்னி
குருவின் இந்த பெயர்ச்சி இந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த குருப்பெயர்ச்சி உங்களை ஆன்மிகத்திற்கு அழைத்து செல்தும். இதனால் யாத்திரை செல்லும் வாய்ப்புக்கள் அதிகம். ஏதாவது நோய்கள் இருப்பின் அது சுகமடைய பல வாய்ப்புக்கள் பிறக்கும். குழந்தைகளைப் பெற ஆர்வமுள்ள தம்பதிகளுக்கு சில நல்ல செய்திகள் கிடைக்கலாம். ராகு மற்றும் கேதுவின் ஆசிகள் உங்கள் நம்பிக்கையை அதிகரிக்கும்.
விருச்சிகம்
இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த பெயர்ச்சி குறிப்பிடத்தக்க நேர்மறையான பலன்களைத் தரும். வாழ்க்கையில் மகிழ்ச்சியும் செழிப்பும் அதிகரிக்கும். குடும்ப உறவுகளுடன் இனி முரண்பட மாட்டீர்கள். சமூக மரியாதை அதிகரிக்கும். ஏதாவது பயணம் உங்களுக்கு லாபமாக அமையும். மத நடவடிக்கைகளில் ஆர்வம் அதிகரிக்கும். அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும். நிலுவையில் உள்ள வேலைகள் நிறைவடையும். திடீர் நிதி ஆதாயங்கள் சாத்தியமாகும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).