தீபாவளிக்கு முகம் கண்ணாடி போல பொலிவு பெற வேண்டுமா? வீட்டிலேயே இதை செய்தால் போதும்
தீபாவளிக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் பண்டிகை காலத்தில் பொலிவாக இருக்க வேண்டும் என அனைவரும் விரும்புவார்கள்.
இந்த பண்டிகையில் எதற்கு வீட்டில் அழகுப்பராமரிப்பு செய்ய வேண்டும் மேகப் செய்யலாம் என நினைக்கலாம். ஆனால் மேக்கப் இல்லாமல் முகம் ஒரு இயற்கை அழகு நிறைந்தாக வைத்திருக்க இந்த வழிமுறைகளால் முடியும்.
இந்த அழக குறிப்புக்கள் உங்களை தேவதை போல காண்பிக்கும். இதை செய்தால் வீட்டிற்கு வந்த உறவினர்கள் கண் எல்லாம் உங்கள் மேல் தான் இருக்கும். அது என்ன வழிமறை என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
அழகுக்குறிப்புக்கள்
க்ளென்சிங்
க்ளென்சிங் என்பது மிகவும் பயனுள்ள சரும பராமரிப்பு முறைகளில் ஒன்றாகும். இந்த முறை உங்கள் சருமத்தை நன்கு சுத்தம் செய்யும்.
இதன் மூலம் சுத்தப்படுத்துதலால் அனைத்து அழுக்கு மற்றும் மேக்கப்பை நீக்கி, சருமத்திற்கு இயற்கையான பளபளப்பை அளிக்கிறது. இந்த சுத்திகரிப்பிற்கு நீங்கள் பச்சை பால் பயன்படுத்தலாம்.
தேசிய மருத்துவ நூலகத்தின் கூற்றுப்படி, பச்சை பால் சருமத்தை சுத்தப்படுத்துவதில் மிகவும் திறம்பட செயல்படுகிறது மற்றும் இயற்கையான பளபளப்பை அளிக்கிறது என தெரியவந்துள்ளது.
ஈரப்பதமாக்குதல்
சருமத்தை நன்கு ஈரப்பதமாக்குவது மிகவும் முக்கியம். இதற்கு பாதாம் அல்லது ஷியா எண்ணெய் போன்ற பொருட்களை பயன்படுத்தி ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்ளலாம். இது தவிர உங்கள் சருமத்திற்கு ஏற்ற ஆர்கானிக் மாய்ஸ்சரைசர்களையும் நீங்கள் பயன்படுத்தலாம்.
வீட்டில் தயாரிக்கப்பட்ட பேஸ்பேக் பயன்படுத்துங்கள்
வீட்டில் தயாரிக்கப்பட்டபேஸ்பேக் பயன்படுத்துவது சருமத்திற்கு இயற்கையான பொலிவையும் ஆரோக்கியத்தையும் தருகிறது. சமையலறையில் பயன்படுத்தக்கூடிய பொருட்களை நாம் சருமத்திற்கு பயன்படுதத்தினால் இது இயற்கையான பொலிவை பெறும்.
இந்த பொருட்களை பயன்படுத்தி நாம் இயற்கை பேஸ்பேக்குகளை உருவாக்கலாம்.
இதற்காக முல்தானி மெட்டி, அரிசி மாவு, கடலை மாவு, மஞ்சள் மற்றும் ரோஸ் வாட்டர் ஆகியவை உங்கள் சருமத்திற்கு பொலிவை கொடக்கக்கூடிய ஒரு சிறந்த கலவையாகும். எனவே உங்கள் சருமத்திற்கு ஏற்ற பேஸ் பேக்குகளை தயார் செய்து பயன்படுத்துங்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |