ரயிலில் உள்ள ஃபேன், லைட் திருடு போவதில்லை ஏன்? பின்னணி காரணம் இதுதான்
ரயிலில் இருக்கும் மின்விசிறி, லைட் இவற்றினை திருடர்கள் ஏன் திருடுவதில்லை என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
நாம் வாழும் இடங்களில் திருடர்கள் தங்கள் கைவரிசை மிக சுலபமாக காட்டிவிட்டு சென்று விடுகின்றனர். வீடு புகுந்து கொள்ளை, சாலையில் செல்லும் செயின் பறிப்பு, பேருந்தில் பயணிக்கும் போது திருட்டு என்று அடுக்கிக் கொண்டே செல்லலாம்.
அதிலும் ஆட்கள் இல்லாமல் பூட்டி கிடக்கும் வீடுகளை குறிவைத்து திருடுவதை மிகவும் சகஜமாக வைத்துள்ளனர். ஆனால் ரயிலில் இருக்கும் பொருட்கள் மட்டும் திருடப்படுவதில்லை. அது ஏன் என்று எப்போதாவது யோசித்தது உண்டா?
அதற்கான காரணத்தை நாம் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
ரயிலில் உள்ள பொருட்கள் ஏன் திருடு போவதில்லை?
ரயில்களில் உள்ள மின்விசிறிகள், பல்புகள் இவற்றினை திருடர்கள் திருடாமல் இருப்பதற்கு இந்திய ரயில்வே சில நுணுக்கங்களை கடைபிடிக்கின்றது. அதாவது இதனை திருடி சென்றாலும் திருடர்கள் வெளியில் எங்கும் பயன்படுத்த முடியாதாம்.
இதற்கு காரணம் என்னவெனில், ரயிலில் இருக்கும் மின்சார சாதனங்கள் 110 வோல்ட் ஆற்றல் கொண்டதாகும், இதனை ரயில்வேயில் மட்டுமே பயன்படுத்த முடியும்.
மேலும் இந்த 110 வோல்ட் சாதனங்களை சார்ஜ் செய்வது கடினமாகும், ஆனால் பயணிகள் தங்களது மொபைல் மற்றும் லேப்டாப் இவற்றிற்கு மட்டும் சார்ஜ் செய்து கொள்வது போன்று அமைப்பை செய்துள்ளது.
ஆனால் இதில் சார்ஜ் மெதுவாக ஏறும், காரணம் இந்த சாதனங்களுக்கு குறைந்தது 100 வோல்ட் போதுமானதாக இருந்தாலும், முழுவேகத்தில் செயல்படுவதற்கு 230 வோல்ட் மின்சாரம் தேவைப்படுமாம்.
நாம் வீடுகளில் பயன்படுத்தி வரும் மிக்ஸி மற்றும் கிரைண்டர்கள் குறைந்தபட்சம் 210 வோல்ட் மின்சாரத்தில் மட்டுமே வேலை செய்யக்கூடியதாகும். ஆனால் ரயில்வே 230 வோல்ட்டுக்கு பதில் 110 வோல்ட் வைத்துள்ளதற்கு காரணம் திருடுவதை தடுப்பதற்காகவே.. இதில் மற்றொரு ஷாக் என்னவெனில் ரயில்வேயின் இந்த நுணுக்கங்கள் பெரும்பாலான திருடர்களுக்கு தெரியுமாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |