தினமும் வேர்க்கடலை சாப்பிட்டு பாருங்க... அதிசயத்தை கண்கூடாக பார்ப்பீங்க
தினமும் வேர்க்கடலை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மையைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
வேர்க்கடலை
புரத சத்தின் சிறந்த மூலமாக பார்க்கப்படும் வேர்க்கடலை உடலுக்கு தேவையான ஆற்றலையும், சுறுசுறுப்பையும் அளிக்கின்றது.
இதில் மாங்கனீஸ், மெக்னீசியம், பாஸ்பரஸ், நியாசின், இரும்புச்சத்து போன்ற முக்கிய தாதுக்கள் உள்ள நிலையில் இவை, எலும்பு மற்றும் உடல் வளர்ச்சிக்கு உதவுகின்றன.
வேர்கடலை சுலபமாக கிடைக்கக்கூடிய, சத்துக்கள் நிறைந்த உணவாக இருக்கும் நிலையில், இதனை நாம் எடுத்துக் கொண்டு, ஜங்க் உணவுகளை சாப்பிடும் பழக்கத்தினை குறைத்துக் கொள்ளலாம்.
நன்மைகள் என்ன?
ரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக வைத்துக் கொள்ள வேர்க்கடலை உதவுகின்றது. குறிப்பாக நீரிழிவு நோயாளிகளுக்கு வேர்க்கடலை நன்மை அளிக்கின்றது.
வேர்க்கடலை சாப்பிடுவது நல்ல கொழுப்புகளை வழங்குவதுடன், இவை இதயத்தின் ஆரோக்கியத்தினை மேம்படுத்தவும் செய்கின்றது.
இதில் உள்ள நியாசின் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடெண்ட்கள், திசுக்களில் பாதிக்கப்படாமல் பாதுகாக்கின்றது.
வேர்க்கடலையில் உள்ள அதிக நார்ச்சத்துக்கள் மற்றும் புரதம் வயிறு நிறைந்த உணர்வை அளிப்பதுடன், அதிக உணவு சாப்பிடுவதையும் தடுக்கின்றது. இதனால் உடல் எடையைக் கட்டுப்படுத்தவும் செய்கின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |