தீபாவளி 2025: செல்வ செழிப்பு அதிகரிக்க எந்த ராசியினர் எந்த நிறத்தில் ஆடை அணியணும்?
பொதுவாகவே அனைவருக்கும் ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று தான் ஆசை. ஆனால் நமது வாழ்க்கை அப்படி அமைவதில்லை ஏற்ற தாழ்வுகளும் பிரச்சினைகளும் தினசரி வாழ்வில் தவிர்க்க முடியாதது.
ஜோதிட சாஸ்திரதின் பிரகாரம் நாம் அணியும் ஆடைகள் நமது ஒவ்வொரு நாளையும். மகிழ்ச்சியாகவும் அதிர்ஷ்டம் நிறைந்ததாகவும் மாற்றுகின்றது என்ற நம்பிக்கை தொன்று தொட்டு காணப்படுகின்றது.
அந்தவகையில் இந்த தீபாவளி தினத்தில் செல்வ செழிப்பு மற்றும் மகிழ்ச்சி அதிகரிக்க 12 ராசிகளும் எந்த நிறத்தில் ஆடை அணிய வேண்டும் என்பது குறித்த விரிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்: மேஷ ராசியில் பிறந்தவர்கள் போர் கிரகமான செவ்வாயின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் என்பதால், இந்த தீபாவளி தினத்தில் சாதக பலன்களை பெற சிவப்பு, மெரூன், கருஞ்சிவப்பு ஆகிய நிறங்களில் உடை அணிய வேண்டும். இந்த நிறத்தில் உடையணியும் போது பல்வேறு சாதக பலன்களும் கிடைக்கும்.
ரிஷபம் : காதளின் கிரகமான சுக்கிரனால் ஆளப்படும் ரிஷப ராசியினர் தீபாவளி தினத்தில் வளர்ச்சி மற்றும் ஸ்திரத்தன்மையின் அடையாளமாக இருக்கும் பச்சை, மரகதப் பச்சை (Green, Emerald Green) ஆகிய நிறங்களில் உடை அணிவதால், வாழ்வில் நல்லிணக்கம், சமநிலை, மற்றும் செழிப்பு அதிகரிக்கும்.
மிதுனம் : தீபாவளி தினத்தில் மஞ்சள், நிறத்தில் ஆடை அணிவது மிதுனத்தின் துடிப்பான ஆளுமையை நிறைவு செய்கின்றது. அதனால் தகவல்தொடர்புத் திறனைப் பெருக்கி, தெளிவையும் புதிய வாய்ப்புகளையும் ஏற்படுத்துவதற்கு வழிவகுக்கும்.
கடகம்: இந்த நல்ல நாளில் கடக ராசியினர் வெள்ளை, வெள்ளி நிறங்களில் ஆடை அணிவதால், தூய்மை மற்றும் உணர்ச்சி சமநிலையைத் தூண்டுகிறது. உள்ளுணர்வை மேம்படுத்தி, அமைதியையும் உணர்ச்சி நல்வாழ்வையும் மேம்படுத்துகின்றது.
சிம்மம்: சூரியனால் ஆளப்படும் சிம்ம ராசியினர் இந்த தீபாவளி நாளில், தங்கம், ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிவதால், சிம்மத்தின் அரச இயல்புடன் ஒத்துப்போகிறது. இது வசீகரத்தையும் அதிர்ஷ்டத்தையும் ஈர்த்து அமோக பலன்களை கொடுக்கும்.
கன்னி : நேரத்திக்கும் பரிபூரணத்துக்கும் பெயர் பெற்ற கன்னி ராசியில் பச்சை, பழுப்பு, ஆலிவ் பச்சை (Green, Brown, Olive Green); நல்லிணக்கம் மற்றும் நிலைத்தன்மை உணர்வை ஊக்குவிக்கும். தீபாவளி தினத்தில் சாதக வாய்ப்புகைளையும் ஏற்படுத்திக்கொடுக்கும்.
துலாம் : இந்த ராசியில் பிறந்தவர்கள் இளஞ்சிவப்பு, வெளிர் நிறங்களில் ஆடை அணிவதால் அன்பு, நல்லிணக்கம், பாசம் உறவுகளில் இணக்கத்தை வளர்த்து, அமைதியையும் மகிழ்ச்சியையும் ஈர்க்கும்.
விருச்சிகம் : மர்மமான இயல்புக்கு பெயர் பெற்ற விருச்சிக ராசியினர் அடர் சிவப்பு, மெரூன் போன்ற நிறங்களில் ஆடை அணிவதால், ஆற்றலை அதிகரிக்கும் இந்த நாளில் அதிர்ஷ்டத்தை ஏற்படுத்திக்கொடுக்கும்.
தனுசு : சாகச குணம் இயல்புக்கு பெயர் பெற்ற தனுசு ராசியினர் ஊதா (வயலட்), இண்டிகோ நிறத்தில் ஆடை அணிவதால் தீபாவளி தினத்தில் படைப்பாற்றல் மற்றும் ஆன்மீக சிந்தனையை ஏற்படுத்தி சாதக பலன்களை கொடுக்கும்.
மகரம்: மகர ராசியில் பிறந்தவர்கள் கருப்பு கலந்த ஆடைகளை தெரிவு செய்வதால், உறுதியை மேம்படுத்தி, இலக்குகளை அடைவதற்கு துணைப்புரியும்.
கும்பம்: சனிபனவானின் ஆதிக்கத்தில் பிறந்த கும்ப ராசியினர் இந்த தீபாவளி தினத்தில், நீல நிறத்தின் ஆடையை தெரிவு செய்வதால், அறிவு மற்றும் சுதந்திரத்துடன் செயல்பட முடியும்.
மீனம்: கற்பனை திறனுக்கு பெயர் பெற்ற மீன ராசியினர் அக்வா, கடல்-பச்சை நிறத்தில் ஆடை அணிவதால், உள்ளுணர்வு மற்றும் இரக்கத்துடன் செய்பட முடியும். இந்த நாளில் அதிர்ஷ்ட பலன்களையும் கொடுக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |