அது ஒரு மோசமான நேரம்... தற்கொலை செய்யணும்போல இருந்துச்சு - பிரபல நடிகை ஓபன் டாக்!
அது ஒரு மோசமான நேரம். அந்நேரத்தில் தற்கொலை செய்யணும்போல இருந்தது என்று பிரபல நடிகை நடிகை ரம்யா ஸ்பாந்தனா தெரிவித்துள்ளார்.
நடிகை ரம்யா ஸ்பாந்தனா
கன்னட சூப்பர் ஸ்டாரான புனீத் ராஜ்குமாரின் ‘அபி’ என்ற படம் மூலம் சினிமாவில் அடியெடுத்து வந்தார் நடிகை ரம்யா என்ற திவ்யா ஸ்பாந்தனா.
இதன் பிறகு தமிழ் சினிமாவில் 2004ம் ஆண்டு நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான குத்து படத்தில் தமிழில் அறிமுகமானார். இதன் பிறகு, கிரி, பொல்லாதவன், தூண்டில், வாரணம் ஆயிரம் உட்பட பல படங்களில் நடித்தார்.
இதன் பிறகு அரசியலில் குதித்த ரம்யா 2012ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். கர்நாடக மாநிலத்தில் மாண்டியா தொகுதியில் போட்டியிட்டு எம்.பி.யானார். பிறகு 2017ம் ஆண்டு காங்கிரஸின் சோஷியல் மீடியா பிரிவின் தேசிய தலைவரானார்.
தற்கொலை செய்யணும்போல இருந்துச்சு
இந்நிலையில், சமீபத்தில் Weekend with Ramesh நிகழ்ச்சியின் 5வது சீசனில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அந்நிகழ்ச்சியில் பல தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில்,
என் தந்தை ஆர்.டி. நாராயண் இறந்து 2 வாரங்களிலேயே நான் நாடாளுமன்றத்திற்கு சென்றேன். நாடாளுமன்றத்தில் எனக்கு யாரையும் தெரியாது. எல்லாமே புதுசா இருந்தது. ஆனால், நான் அனைத்தையும் சீக்கிரமாக கற்றுக்கொண்டேன். என் துக்கத்தையும் தாண்டி நான் கடுமையாக உழைத்தேன். கவனமும் செலுத்தினேன். மாண்டியா தொகுதி மக்கள் தான் எனக்கு நம்பிக்கை கொடுத்தார்கள்.
என் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தையும், தாக்கத்தையும் ஏற்படுத்திய என் அம்மா, 2-வது என் அப்பா. 3வது ராகுல் காந்தி. என் தந்தை உயிரிழந்தபோது, நான் மோசமான நிலைமைக்கு தள்ளப்பட்டேன். தற்கொலை கூட செய்து கொள்ளலாமா என்று கூட நினைத்தேன். தேர்தலிலும் தோல்வி அடைந்தேன். அது ரொம்ப மோசமான காலக்கட்டம். என் எண்ணத்திலும், மனதிலும் வெறும் கவலை மட்டும் தான் இருந்தது.
அந்நேரத்தில் ராகுல் காந்திதான் எனக்கு உதவியாக இருந்தார். நிறைய உதவி செய்தார். எமோஷனலாகவும், ஆதரவாகவும் இருந்தார். நிறைய நம்பிக்கை கொடுத்தார் என்றார்.
தற்போது இது தொடர்பான தகவல் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த அவரது ரசிகர்கள் வாழ்க்கையில் எந்த பிரச்சினை வந்தாலும், தற்கொலை செய்து கொள்ள நினைக்கக் கூடாது. நீங்கள் ரொம்ப தைரியமானவர் என்பதை மறந்துவிட வேண்டாம் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.