பாக்கியலட்சுமி ஜெனிக்கு என்னாச்சு.. மருத்துவமனையில் இருந்து வெளியான புகைப்படம்
பாக்கியலட்சுமியில் நடித்து வரும் திவ்யா கணேஷ் மருத்துவமனையில் இருப்பது போன்ற புகைப்படமொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
திவ்யா கணேசன்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய வந்த "கேளடி கண்மணி" சீரியல் மூலம் சின்னத்திரைக்குள் அறிமுகமாகியவர் தான் நடிகை திவ்யா கணேசன்.
இந்த சீரியல் சரியாக மக்கள் மத்தியில் நல்ல ரீச் கொடுக்கவில்லை. இதனால் சீரியல் பாதியுடன் நிறைவடைந்தது.
பின்னர் சமூக வலைத்தளங்களில் ஆர்வம் காட்டி வந்த திவ்யாவிற்கு பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
சுமாராக 1 வருடத்திற்கு மேல் பாக்கியலட்சுமி சீரியலில் செழியன் மனைவி ஜெனி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இவரின் நடிப்பு மக்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டு வருகிறது.
டெங்கு காய்ச்சலின் தாக்கம்
இந்த நிலையில், திவ்யா கணேஷன் டெங்கு காய்ச்சலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாராம்.
இது குறித்து திவ்யா, “மகாநதி தொடரில் நடிக்க முடியாமல் இருக்கிறது. எனது கதாபாத்திரத்திற்கு வேறு யாராவது நடிகையை அவர்கள் தேட வேண்டும் என்பதற்காக நான் மன்னிப்பு கேட்கிறேன்..” என பதிவு செய்துள்ளார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |