பொம்மைகளை சேகரிக்கும் விவாகரத்தான பெண்! பதறியடித்து ஓடிய பெற்றோர் (வினோத உலகம்)
தனது குழந்தைகள் கணவருடன் சென்ற நிலையில் அவர்களுடன் இருப்பதைப் போலவே உணர்வதற்காக பொம்மைகளை சேமித்து கொண்டு வருகிறார் தாயொருவர்.
அமெரிக்காவின் விர்ஜினியா பகுதியை சேர்ந்தவர் 42 வயது வாட்சன். அவருக்கு கடந்த 2010ஆம் ஆண்டு விவாகரத்து கிடைத்துள்ளது.
அதனை அடுத்து கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் ஆயிரக் கணக்கான டாலர்கள் செலவு செய்து குழந்தைகள் மிகவும் விரும்பும் பொம்மைகளை வாங்கியுள்ளார்.
விவாகரத்தான உடனேயே தனது இரண்டு குழந்தைகளும் தன்னுடைய கணவருடன் சென்றுவிட்டதால் அவர்களின் நினைவு போக்குவதற்காக இதுபோன்ற செய்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் அவர் பேசும்போது, குழந்தையை தனியாக தன்னிடம் ஒப்படைக்குமாறு கணவரிடம் கேட்ட போதிலும் அவர் மறுத்துவிட்டதாக தெரிவித்தார்.
இது போன்ற பொம்மைகளை சேகரித்து வைப்பது குழந்தையை தத்தெடுத்து வளர்ப்பது போன்று உள்ளதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
இது போன்ற பல சுவாரஷ்யமான தகவல்களுடன் வினோத உலகம் காணொளி வெளியாகியுள்ளது. முழுமையாக பார்த்து ரசியுங்கள்.