தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்தில் உறுதி... குடும்ப நல நீதிமன்ற விசாரணையில் என்ன நடந்தது?
நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கின் விசாரணைக்காக இருவரும் இன்று 21 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளனர்.
நடிகர் தனுஷ் -ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
நடிகர் தனுஷும், ஐஸ்வர்யா இருவரும் காதலித்து திருமணம் செய்த நிலையில் 20 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்தனர்.
இவர்களுக்கு லிங்கா, யாத்ரா என இரண்டு மகன்கள் இருக்கும் நிலையில் கடந்த ஜனவரி மாதம் 17ஆம் திகதி இருவரும் பிரிவதாக சமூகவலைத்தளங்களில் அறிவித்தனர்.
இருவரையும் சேர்த்து வைப்பதற்கு குடும்பத்தினர் பல முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், இருவரும் ஈடுகொடுக்காமல் தங்களது வேலையில் பிஸியாக இருந்து வருகின்றனர்.
இருவரும் தங்களுடைய திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் வகையில் பரஸ்பரம் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
அதில் 2004-ம் ஆண்டு நடைபெற்ற தங்களின் திருமணத்தை செல்லாது என அறிவிக்க வேண்டும் எனக்கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதனை தொடர்ந்து விவாகரத்திற்காக இருவரும் தாக்கல் செய்திருந்த மனு முதன்மை குடும்ப நல நீதிமன்றத்தில் இரண்டு முறை விசாரணைக்கு வந்தபோதும், நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா வழக்கில் ஆஜராக தவறியுள்ளனர்.
ஆஜராகாத காரணத்தால் மீண்டும் இவ்கள் இருவரும் இணைய வாய்ப்பிருக்கின்றது என இவர்களின் குடும்பத்தினர் உட்பட ரசிகர்களும் எதிர்ப்பார்பில் இருந்தனர்.
இந்நிலையில் இன்று வழக்கு விசாரணை மீண்டும் இடம்பெற்ற நிலையில், இதில் தனுஷ் - ஐஸ்வர்யா இருவருமே ஆஜராகியுள்ளனர்.
இருவரிடமும் குடும்ப நல நீதிமன்ற நீதிபதி சுபாதேவி ரகசிய விசாரணை நடத்திய போது, இருவருமே பிரிவதில் உறுதியாக இருப்பதாக நீதிபதியிடம் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதனையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் 27ஆம் திகதிக்கு ஒத்திவைத்து உத்தரவிடப்பட்டுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |