கமலை பார்த்து வியந்த டிஸ்கோ சாந்தி...அடடே இதுதான் காரணமா?
கவர்ச்சி நடனங்கள் மட்டுமில்லாமல் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து புகழ் பெற்றவர் நடிகை டிஸ்கோ சாந்தி. 80களில் இவரது நடனத்துக்கு மயங்காத ரசிகர்களே கிடையாது என்று கூட கூறலாம்.
இவர் ரஜினி, கமல் போன்ற முன்னணி ஹீரோக்களுடன் நடித்தவர். இவ்வாறு இருக்க கடந்த 1996ஆம் ஆண்டில் பிரபல தெலுங்கு பட நடிகரான ஸ்ரீஹரியை திருமணம் செய்துகொண்டு செட்டிலாகி விட்டார். அதன்பின்னர் தொடர்ந்து எந்தப் படங்களிலும் நடிக்கவில்லை.
கணவர், குழந்தைகள் என முழுமையான இல்லத்தரசியாக மாறிவிட்டார். இந்நிலையில் அவரது கணவரான ஸ்ரீஹரி மாரடைப்பினால் கடந்த 2013ஆம் ஆண்டில் உயிரிழந்தார். அதன்பின்பு தனது மகன்களுடன் வாழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அவர் அண்மையில் யூடியூப் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், தனது கணவர் மீது தான் மிகுந்த அன்புடன் இருந்ததாகவும் அவர் இறந்து இத்தனை வருடங்களாகியும் இன்னும் அவரது நினைவுகள் தன்னை விட்டு போகவில்லை எனவும் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டபோது தான் துடித்துப் போனதாகவும் கூறியுள்ளார்.
இந்நிலையில் அவர் கமலின் விக்ரம் படத்தை பார்த்துவிட்டு, தினமும் அந்தப் படத்தை பார்க்கும் அளவுக்கு வீட்டில் அனைவருக்கும் பைத்தியமாகி விட்டதாகவும் கூறியுள்ளார். 70 வயதான நிலையில் கமலை வாயைப் பிளந்துகொண்டு பார்ப்பதாகவும் கூறியுள்ளார்.
அதுமட்டுமில்லாமல் எந்த கேரக்டர் கொடுத்தாலும் அந்த கேரக்டராகவே அவர் மாறிவிடுவதாகவும் தெரிவித்துள்ளார்.