மழையுடன் போராடும் இலங்கை மக்கள்- மருத்துவர் கொடுத்த முக்கிய ஆலோசனை

Cold Fever Colombo Sri Lanka Floods In Sri Lanka Flood
By DHUSHI Nov 29, 2025 12:40 PM GMT
DHUSHI

DHUSHI

Report

தொற்று நோய்தடுப்பு நடவடிக்கைகள் குறித்த பதிவு பொது நல மருத்துவர் Dr.ஃபரூக் அப்துல்லா பகிர்ந்த பதிவு இணையவாசிகளின் கவனத்திற்கு சென்றுள்ளது.

டிட்வாஹ் புயலின் தாக்கத்தால் இலங்கையின் பெரும்பான்மை பகுதிகளில் நீர் தேங்கியும் மண் அரிப்பு ஏற்பட்டு நிலச்சரிவு ஏற்பட்டு மக்களின் அன்றாட வாழ்க்கையை பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது.

தற்போது வரை சுமாராக 100-க்கும் அதிகமான மரணங்களும் சிலர் காணாமல் போயிருப்பதும் குறித்த தகவல்களைக் காணும் போது மனம் பதற்றம் கொள்கிறது.

தூங்க முதல் பாலில் ஏலக்காய் சேர்த்து குடித்தால் என்ன பலன்?

தூங்க முதல் பாலில் ஏலக்காய் சேர்த்து குடித்தால் என்ன பலன்?

இந்தத் துயர நிகழ்வில் இருந்து இலங்கை தேசத்து மக்கள் அனைவரும் விரைவில் மீண்டு வர மனதாரப் பிரார்த்திப்போம். நம்மால் இயன்ற உதவிகளை நம் அண்டை நாட்டு சகோதரர்களுக்குச் செய்வோம்.

இந்த நிலையில் பெரு வெள்ளங்களின் போதும் அதற்குப் பின்பும் நீர் தேங்கி நிற்கும் இடங்களில் பல நோய்கள் உண்டாகும் வாய்ப்பு உண்டு. அவற்றை எப்படி தடுக்கலாம் என்பதை பதிவில் விளக்கமாக பார்க்கலாம். 

மழையுடன் போராடும் இலங்கை மக்கள்- மருத்துவர் கொடுத்த முக்கிய ஆலோசனை | How To Protect Ourselves In Case Of Flooding

மக்களுக்கு எச்சரிக்கை

1. தண்ணீரை எப்போதும் காய்ச்சி வடிகட்டிப் பருக வேண்டும்.

க்ளோரினேற்றம் செய்யப்பட்டு விநியோகிக்கப்பட்டாலும் தண்ணீரை நன்றாக காய்ச்ச வேண்டும் குறைந்தபட்சம் ஐந்து நிமிடங்கள் நீர்க்குமிழ்கள் தோன்றுமளவு காய்ச்சிப் பருக வேண்டும்.

உடைத்த முட்டை குழம்பு... கிராமத்து ஸ்டைலில் எவ்வாறு செய்யலாம்?

உடைத்த முட்டை குழம்பு... கிராமத்து ஸ்டைலில் எவ்வாறு செய்யலாம்?

மாசடைந்த நீரை வீட்டிலேயே க்ளோரினேற்றம் செய்யும் எளிய முறை :-

  • ப்ளீச்சிங் பவுடரை 35 கிராம் எடுத்து 1 லிட்டர் நீரில் கலந்தால் 1% ஸ்டாக் சொல்யூசன் கிடைக்கும்.
  • நீங்கள் தொற்று நீக்கம் செய்ய விரும்பும் நீரின் அளவைப் பொருத்து ஒரு லிட்டர் நீருக்கு 0.6 மில்லி ஸ்டாக் சொல்யூசன் 10 லிட்டர் நீருக்கு 6 மில்லி 100 லிட்டர் நீருக்கு 60 மில்லி 1000 லிட்டர் நீருக்கு 600 மில்லி 10000 லிட்டர் நீருக்கு 6000 மில்லி என்று ஸ்டாக் சொல்யூசனைக் கலந்து அரை மணிநேரம் அப்படியே விட்டு விட வேண்டும்.
  • எப்போதும் க்ளோரினேற்றம் செய்யப்பட்ட காய்ச்சிய நீரைப் பருகுவதே பாதுகாப்பானது.
  • வயிற்றுப் போக்கு ஏற்பட்டால் ஓ.ஆர்.எஸ் எனும் உப்புக் கரைசல் திரவத்தைப் பருகி வர வேண்டும்.
  • தாமதிக்காமல் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு விரைய வேண்டும்.
  • சுயமருத்துவம் ஆபத்தானது.
  • முறையான மருத்துவ சிகிச்சையை விரைவில் பெற்றால் நோயில் இருந்து மீண்டு வரும் காலம் கணிசமாகக் குறையும்.

மழையுடன் போராடும் இலங்கை மக்கள்- மருத்துவர் கொடுத்த முக்கிய ஆலோசனை | How To Protect Ourselves In Case Of Flooding

2. சகதிகளில் வெறும் கால்களை நீண்ட நேரம் வைத்திருப்பதால் சேற்றுப்புண் தோன்றும் வாய்ப்பு உண்டு இதனால் கால்கள் ஊறிப்போய் "Trench Foot" எனும் பிரச்சனை வரலாம்.

முதல் உலகப்போரில் பதுங்கு குழி பறித்து போர் புரியும் முறை இருந்தது. அப்போது பல வீரர்களுக்கும் பதுங்குகுழியில் சேர்ந்த மழை நீர் பாதங்களை ஊறவைத்து அதன் மூலம் நோய் தொற்று ஏற்படுத்தும் நிலை இருந்தது.

அதே போன்று சகதியில் கால்களை வைத்து நீண்ட நேரம் இருப்பதால் "Trench Foot" என்று அழைக்கப்படும். குறிப்பாக நீரிழிவு நோய் இருப்பவர்கள் இதன் மூலம் அதிக பாதிப்புக்கு உள்ளாகலாம். எனவே கட்டாயம் பாதணி அல்லது ஷூ அணிந்து இருப்பது நல்லது.

சகதியில் நடக்க நேரும் போது நெகிழிப்பையை கணுக்கால் வரை நன்றாக இறுக்கமாகக் கட்டிக்கொண்டு நடக்கலாம்.

மழையுடன் போராடும் இலங்கை மக்கள்- மருத்துவர் கொடுத்த முக்கிய ஆலோசனை | How To Protect Ourselves In Case Of Flooding

3. தேங்கிக்கிடக்கும் நீரில் வெறும் கால்களில் நடக்கும் போது கால்களில் தண்ணீருக்குள் கிடக்கும் கல் , முள் குத்தி காயம் கீறல் ஏற்படலாம். அல்லது தண்ணீர் தேங்கி இருக்கும் இடங்களில் விஷப்பூச்சிகள் மற்றும் ஜந்துக்கள் கடித்து விடும் சூழல் இருக்கலாம்.

எனவே, கால்களில் அல்லது உடலில் வேறு ஏதேனும் பகுதிகளில் கல், முள் குத்தினாலோ விஷப்பூச்சிகள் கடித்தாலோ உடனே அருகில் இருக்கும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுகி டிடி எனும் டெட்டானஸ் தடுப்பு ஊசி போட்டுக்கொள்ள வேண்டும்.

கால்களில் சேற்றுப் புண் ஏற்பட்டால் க்ளோட்ரிமசோல் களிம்பு/ விட்ஃபீல்டு களிம்பு பூசிக் கொள்ளவும். - கால்களில் ஏதேனும் கடித்த உணர்வு ஏற்பட்டால் உடனடியாக கவனித்து மருத்துவம் செய்ய வேண்டும்.

பாம்புக்கடியாக இருக்கலாம். அலட்சியம் ஆபத்து. பாம்புக்கடி என்றால் இரண்டு பல் கடி தடம் இருக்க வேண்டும் என்றில்லை. கையில் தடி வைத்துக் கொண்டு அதை வைத்து அடித்துக் கொண்டும் நடக்கும் போது அதிர்வுகளை ஏற்படுத்திக் கொண்டே நடப்பது ஊர்வனவற்றை விலகச் செய்யும். 

மழையுடன் போராடும் இலங்கை மக்கள்- மருத்துவர் கொடுத்த முக்கிய ஆலோசனை | How To Protect Ourselves In Case Of Flooding

4. வெள்ள பாதிப்பு நிவாரணப்பணி புரியும் போது நாய்கள் , பூனை கடித்து விடும் சூழல் ஏற்பட்டால் உடனே ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுகி ரேபிஸ் தடுப்பூசியை அட்டவணைப்படி முறையாக போட்டுக்கொள்ள வேண்டும்.

5. குளிர்ச்சியான தரையில் கால்களை வைத்திருக்கும் போது முதியோருக்கு கால்கள் மரமரத்துப்போய் விடும் cold feet வந்துவிடும் தன்மை இருக்கும். எனவே வீடுகளுக்குள் இருக்கும் போதும் கூட கால்களில் காலுறைகள் (சாக்ஸ்) அல்லது பாதணி அணிந்து கொள்வது நல்லது. அவ்வபோது வெதுவெதுப்பான நீரில் கால்களை வைத்திருப்பது இதை தடுக்க உதவும்.

மழையுடன் போராடும் இலங்கை மக்கள்- மருத்துவர் கொடுத்த முக்கிய ஆலோசனை | How To Protect Ourselves In Case Of Flooding

6. வீட்டைச்சுற்றி தேங்கியிருக்கும் நீரில் தொற்றுப்பரப்பும் கிருமிகள் வராமல் இருக்க ப்ளீச்சிங் பவுடர் போட்டு வைப்பது உதவும். வீட்டைச்சுற்றி தண்ணீர் தேங்கி இருந்தாலும் சிறிய சிறிய பொருட்களில் பாத்திரங்களில் தண்ணீர் தேங்கும் போது அவற்றில் டெங்கு பரப்பும் ஏடிஸ் கொசு முட்டையிட்டு வளரும் அபாயம் உள்ளது.

எனவே வீட்டைச்சுற்றியுள்ள இடங்களில் பாத்திரங்கள் தேங்காய் சிரட்டைகள் டயர்கள் ப்ளாஸ்டிக் சாமான்கள் இருந்தால் அவற்றை அப்புறப்படுத்தவும் கட்டாயம் குடம் , பாத்திரங்களில் தண்ணீர் சேமித்து வைத்திருந்தால் அவற்றை மூடி போட்டு அல்லது துணிகள் வைத்து வேடு கட்டி வைக்கவும். தண்ணீருக்குள் கொசுப்புழுக்கள் நெளிந்தால் அந்த தண்ணீரை உடனே கொட்டி விட வேண்டும்.

7. காய்ச்சல் / இருமல் சளி போன்ற அறிகுறிகள் தோன்றுமாயின் உடனே தாமதிக்காமல் அருகில் இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுகி சிகிச்சை எடுக்க வேண்டும்.

மழையுடன் போராடும் இலங்கை மக்கள்- மருத்துவர் கொடுத்த முக்கிய ஆலோசனை | How To Protect Ourselves In Case Of Flooding

8. வீட்டில் பிறந்து ஒரு வருடத்துக்குள் இருக்கும் குழந்தைகள் இருந்தால் அவர்களுக்கு நேரும் காய்ச்சல் சளி இருமல் போன்ற அறிகுறிகளை புறந்தள்ளாமல் உடனே மருத்துவ சிகிச்சை கிடைக்கச்செய்ய வேண்டும்.

வீட்டில் கர்ப்பிணிகள் அதிலும் நிறைமாத கர்ப்பிணிகள் தங்களது பிரசவ தேதியை நெருங்கிக்கொண்டிருந்தால் முன்கூட்டியே அவர்களை அருகில் இருக்கும் அரசு மருத்துவமனைகளில் அட்மிட் செய்து கண்காணிக்க வேண்டும்.

வெள்ளம் வடிந்த பிறகு பிரசவம் பார்க்கச்செல்லலாம் என்று காத்துக்கொண்டிருப்பது தாய் சேய் இருவர் உயிருக்கும் ஆபத்து விளைவிக்கலாம்

வெள்ளம் ஏற்பட்டதில் இருந்து ஆறு வாரங்கள் வரை பல்வேறு தொற்று நோய்களின் காத்திருப்பு காலமாகும்.

  • காய்ச்சல்
  • இருமல்
  • தலைவலி
  • கண் சிவந்து போதல்
  • செந்நிற படை

இது போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.

மழையுடன் போராடும் இலங்கை மக்கள்- மருத்துவர் கொடுத்த முக்கிய ஆலோசனை | How To Protect Ourselves In Case Of Flooding

 9. கொசுக்கடியில் இருந்து தப்பிக்க கொசுவத்திச்சுருள் உபயோகிக்கலாம். மணிக்கட்டு வரை முழுக்கை சட்டைகள் , கால்களை முழுவதுமாக மறைக்கும் பேண்ட் அணியலாம். குழந்தைகளுக்கு கொசு கடிக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

10. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு தயார் செய்யும் இடங்களில் அதிக சுகாதாரம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும் உணவு தயார் செய்யும் சமையல்காரர்கள் கட்டாயம் கைகளை சுத்தமாக சோப் போட்டு கழுவி விட்டு உணவுகளை செய்ய வேண்டும்.

மழையுடன் போராடும் இலங்கை மக்கள்- மருத்துவர் கொடுத்த முக்கிய ஆலோசனை | How To Protect Ourselves In Case Of Flooding

11. வெள்ள மீட்புப் பணிகளில் ஈடுபடுபவர்கள் எலிக்காய்ச்சலுக்கு முன்கூட்டிய தடுப்பு மாத்திரையான டாக்சிசைக்ளின் 100 மில்லி கிராம் காலை மற்றும் இரவு - ஒரு வாரம் உட்கொள்ளவும். இவை உணவு மூலம் நோய் தொற்று பரவுவதை தடுக்கும். 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு

15 Jan, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை மாரீசன்கூடல், சாவகச்சேரி, சுவிஸ், Switzerland

23 Jan, 2013
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டுவில் கிழக்கு, Rorschach, Switzerland

19 Jan, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Lünen, Germany

05 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Uxbridge, United Kingdom

15 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கரைச்சிக்குடியிருப்பு, Brampton, Canada

20 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ் நவாலி வடக்கு, Jaffna, நவாலி வடக்கு, சென்னை, India, London, United Kingdom

10 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Milton Keynes, United Kingdom

17 Jan, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, பூநகரி, அரியாலை, London, United Kingdom

01 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரியநீலாவணை, கல்முனை

22 Jan, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், பேர்லின், Germany

23 Jan, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, கோண்டாவில்

25 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ்ப்பாணம், Richmond Hill, Canada, வெள்ளவத்தை

02 Feb, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

20 Jan, 2026
மரண அறிவித்தல்

நவாலி, மட்டுவில் தெற்கு, Toronto, Canada, Ajax, Canada

19 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Brampton, Canada

22 Jan, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வட்டக்கச்சி

20 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், பரந்தன், Chur, Switzerland, Markham, Canada

21 Jan, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, Sangarathai, மானிப்பாய், நெதர்லாந்து, Netherlands, ஜேர்மனி, Germany

23 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 2ம் வட்டாரம், வட்டக்கச்சி, Paris, France

22 Jan, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், முரசுமோட்டை, சுவிஸ், Switzerland

21 Jan, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Bochum, Germany

21 Jan, 2011
மரண அறிவித்தல்

மண்டைத்தீவு 5ம் வட்டாரம், கொழும்பு, Toronto, Canada

17 Jan, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, Pinner, United Kingdom

17 Jan, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை, பிரான்ஸ், France, Mitcham, United Kingdom

06 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டி, தெல்லிப்பளை, வட்டுக்கோட்டை, கொழும்பு, Toronto, Canada

21 Dec, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada, வவுனியா

21 Jan, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொந்தக்காரன்குளம், வைரவபுளியங்குளம், வவுனியா

02 Feb, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Erlalai, புங்குடுதீவு, கட்டுவன், மட்டக்களப்பு, கனடா, Canada

20 Jan, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Brampton, Canada

30 Jan, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US