ஜியோவின் சூப்பரான இரண்டு ப்ரீப்பெய்டு பிளான்களை நிறுத்திய அம்பானி..!
ஜியோ நிறுவனம் இரண்டு ஃப்ரீபெய்டு பிளான்களை முற்றுலுமாக நிறுத்தியுள்ளது வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளது.
ஜியோ நிறுவனம்
ரிலையன்ஸ் டெலிகாம் நிறுவனத்திற்கு சொந்தமான ஜியோ நிறுவனம், நேற்றிலிருந்து தனது மொபைல் ரீசார்ஜ் திட்டத்தில் பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.
இதுவரை நீங்கள் பயன்படுத்தி வந்த அனைத்து திட்டங்களிலும் விலையினை அதிகரித்துள்ளது. அண்மையில் ஜியோ நிறுவனம் ரூ.395 மற்றும் ரூ.1559 திட்டங்களை நிறுத்தியுள்ளது.
இதுபோன்ற சூழ்நிலையில், அதே அம்சங்களுடன் இருக்கும் மீதமுள்ள ரீச்சார்ஜ் பிளான்களை வாடிக்கையாளர்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
ஜியோ நிறுவனத்தின் இரண்டு பிரபலமான ப்ரீபெய்ட் திட்டங்களான ரூ.395 மற்றும் ரூ.1559 ஆகியவை ஜியோவின் My Jio ஆப் மற்றும் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலிருந்து நீக்கியுள்ளது.
இவை கட்டண உயர்வு செய்வதற்கு முன்பே இந்த இரண்டு பிளான்களையும் தூக்கியுள்ளது, பயனர்களுக்கு பேரிடியாக உள்ளது.
நீக்கப்பட்ட திட்டங்கள்
அதாவது ரூ.395 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில் 84 நாட்கள் வேலிடிட்டியுடன் 5G டேட்டா சேவையை வழங்கியிருந்தது. இதே போன்று ரூ.1559 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில் 336 நாட்கள் வரம்பற்ற 5ஜி டேட்டாவை பெற்றுக்கொள்ளலாம் என்று இருந்தது.
தற்போது குறித்த நிறுவனம் பயனர்களுக்கு ரூ.2545 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை 336 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்குகிறது. இந்த திட்டம் பயனர்களுக்கு ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ்/நாள், வரம்பற்ற குரல் அழைப்பு வசதி ஆகியவற்றை வழங்குகிறது.
அதே நேரத்தில், ஜியோ பயனர்களுக்கு 84 நாட்கள் செல்லுபடியாகும் திட்டம் ரூ.666 அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் இந்த திட்டம் 1.5 GB/நாள் டேட்டா, 100 SMS/நாள் மற்றும் வரம்பற்ற அழைப்பு வசதியுடன் வருகிறது.
தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்கள் நிதி இழப்புகளை சரிசெய்வதற்கு இவ்வாறு செய்துள்ளது, வாடிக்கையாளர்களுக்கு இவ்வாறு திட்டங்களை உயர்த்தியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |