வல்லாரை கீரை யாரெல்லாம் சாப்பிட கூடாது தெரியுமா?
பொதுவாக கீரைகள் என்றாலே அனைவருக்கும் பிடிக்கும்.
அவசியம் சாப்பிட வேண்டிய உணவுகளில் கீரைகளும் ஒன்று.
அந்த வகையில் இலங்கை போன்ற நாடுகளில் அதிகம் மக்கள் விரும்பி சாப்பிடும் கீரை வகை தான் வல்லாரை. இது மூலிகை தாவரங்களில் மிகவும் முக்கியமானதாகும்.
இதில் அதிகளவிலான கனிமங்கள், கால்சியம் சத்துக்கள் இருப்பதாக கூறப்படுகின்றது.
எவ்வளவு நன்மைகள் இருந்தாலும் வல்லாரை கீரையை குறிப்பிட்ட சிலர் சாப்பிடவே கூடாது. அது யார் யார் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்?
வல்லாரை கீரை அதிகம் சாப்பிட்டலால் என்ன நடக்கும்?
1. வல்லாரை கீரை அதிகம் சாப்பிடுவதால் ஒவ்வாமை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அத்துடன் தோல் வெடிப்பு, அரிப்பு மற்றும் சுவாசிப்பதில் சிரமம் போன்ற பிரச்சனைகள் இருக்கும். இப்படியான பிரச்சினையுள்ளவர்கள் மருத்துவர் ஆலோசனைப்படி எடுத்து கொள்ளலாம்.
2. இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் திறன் வல்லாரை கீரைக்கு இருக்கிறது. இதனை இரத்தப்போக்கு கோளாறுகள் உள்ளவர்களுக்கு சாப்பாட்டால் விளைவுகள் பயங்கரமாக இருக்கும்.
3. அளவுக்கு அதிமாக வல்லாரை கீரையை எடுத்துக் கொள்பவர்களுக்கு தலைவலி, தலைசுற்றல் போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது.
4. வலிப்பு நோயின் முக்கிய காரணியாக வல்லாரை மாறி விடும். ஏனெனின் மூளையில் ஏற்படுகிற வேதிப் பொருட்களை அதிக அளவில் தூண்டிவிடும் ஆற்றல் வல்லாரை கீரைக்கு இருக்கிறது.
5. வல்லாரை கீரையில் உள்ள ஆக்சலேட்கள் சிறுநீரக கற்களை உருவாக்கலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். ஏற்கனவே சிறுநீரக கற்களால் பாதிக்கப்பட்டவர்கள் வல்லாரையை மறந்தும் சாப்பிடாதீங்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |