அடிக்கடி தலைவலி தைலம் தடவினால் என்ன நடக்கும்? ஆய்வின் வெளிச்சம்
பொதுவாக சிலருக்கு தலைவலி வந்தால் எந்த வேலையும் செய்ய முடியாது.
தலைக்குள் ஏதோவொரு வினோதமான உணர்வு ஏற்படுவது போல் இருக்கும்.
இந்த பிரச்சினை மன அழுத்தம், நீரிழப்பு, சரியாக சாப்பிடாதது உள்ளிட்ட பல காரணங்கள் ஏற்படும்.
அந்த வலியை தாங்க முடியாமல் உடனே சரிச் செய்ய என்னென்ன வலிகள் உள்ளதோ அவற்றை பற்றி யோசிப்போம்.
அப்படி பலரும் கையில் எடுக்கும் ஓரே பொருள் தான் தைலம். இதனை சிலர் பழக்கமாகவே வைத்திருக்கிறார்கள்.
அந்த வகையில் தலைவலிக்கு தைலம் பயன்படுத்துவது நல்லதா? கெட்டதா? என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
தலைவலி
சிலருக்கு தலைவலிக்கு பயன்படுத்தும் தைலம் ஒவ்வாமையை ஏற்படும். ஆனால் பலர் இதனை வாசணைக்காகவும் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்தியா போன்ற நாடுகளில் உள்ளவர்கள் இரவில் படுக்கைக்கு செல்லும் முன்னர் தைலம் வாசணை நுகர்ந்து செல்வார்கள். தலைவலி, உடல் வலி உள்ளிட்ட பல காரணங்களுக்காக தைலம் பயன்படுத்துவார்கள்.
தைலம் பயன்படுபாட்டினால் ஏற்படும் பலன்கள்?
1. கடும் தலைவலியால் அவதிப்படுபவர்கள் தைலம் பயன்படுத்துவார்கள். இது வலி நிவாணியாகவும், தசைபிடிப்புகளை குணப்படுத்தும் காரணியாகவும் இருக்கும்.
2. அடிக்கடி தலைவலியால் அவஸ்தைப்படுவர்கள் மருத்துவரை பார்ப்பதற்கு முன்னர் தைலம் கொண்டு மசாஜ் செய்து பார்க்கலாம். இது ரத்த ஓட்டத்தை சீராக்கும். அத்துடன மன அழுத்தத்திற்கும் நிவாரணம் கொடுக்கும்.
3. பொதுவாக தலைவலி தைலங்கள் ஒரு வகையான வாசனையுடன் இருக்கும். இது மனதிற்கு ஒரு தளர்வை கொடுக்கும். போதுமான உறக்கமின்மை காரணத்தினால் சிலருக்கு தலைவலி ஏற்படும். இரவில் தைலத்தை நுகர்ந்து பார்ப்பதால் நன்றாக தூக்கம் வரும். தூக்கமின்மை பிரச்சினைக்கு இது சிறந்த தீர்வாக இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |