இறைச்சியை சரியாக சமைக்காமல் சாப்பிட்டால் இந்த நோய் வருமாம்.. ஜாக்கிரதை
உலகம் முழுவதும் அசைவ உணவுகள் விரும்பிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
அசைவ உணவுகளில் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் இருக்கின்றமையினால் குழந்தைகளுக்கும் கொடுக்கிறார்கள்.
ஆனாலும் இறைச்சியை முறையாக சமைக்காமல் சாப்பிடும் போது ஏகப்பட்ட ஆபத்துக்கள் ஏற்படுத்துகின்றது.
நாம் செல்லும் பல ஹோட்டல்களில் இறைச்சியை அரைவேக்காடாகவோ அல்லது நடுத்தர அளவிலோ வேகவைத்து சாப்பிடக் கொடுப்பார்கள்.
இப்படி செய்வதால் பாக்டீரியா மற்றும் ஒட்டுண்ணிகள் உடலுக்குள் செல்லும். அத்துடன் வயிற்றில் மறைந்திருந்திருக்கும் இந்த நோய்க்கிருமிகள் நாட்கள் செல்ல பல ஆரோக்கிய குறைபாடுகளை ஏற்படுத்தும். சில சமயங்களில் உயிருக்கு கூட ஆபத்தாக முடியலாம்.
மேலும், வேகாத இறைச்சியில் ஈ.கோலை, சால்மோனெல்லா, கேம்பிலோபாக்டர் மற்றும் லிஸ்டீரியா போன்ற பாக்டீரியாக்கள் உள்ளன. இது கடுமையான நோய்களுக்கு வழிவகுக்கும்.
அந்த வகையில், சரியாக சமைக்காத உணவுகளை சாப்பிடும் பொழுது என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
வேகாத இறைச்சியை சாப்பிடும் போது ஏற்படும் பாதிப்புக்கள்
1. நோய்க்கிருமிகள் வயிற்றுக்குள் சென்றவுடன் லேசான அசௌகரியங்களை ஏற்படுத்தும். உதாரணமாக, குமட்டல், வயிற்றுப்போக்கு, வயிற்றுப் பிடிப்புகள் மற்றும் வாந்தி வருவது போன்று இருக்கும்.
2. இதனை கவனத்தில் கொள்ளாத போது நீரிழப்பு, அதிக காய்ச்சல் மற்றும் நீண்ட கால செரிமான பிரச்சினைகள் ஏற்படலாம்.
3. வேகாத இறைச்சியை உட்கொள்வதால் இரைப்பை குடல் கோளாறுகள் ஏற்படும். இதற்கு உடனடி மருத்துவ கவனிப்பு தேவைப்படும்.
4. பாக்டீரியாவையும் பார்க்க வேகாத இறைச்சியில் டோக்ஸோபிளாஸ்மா மற்றும் டிரிசினெல்லா போன்ற ஒட்டுண்ணிகள் உள்ளன. இது தசைகள் மற்றும் நரம்பு மண்டலம் ஆகியவற்றை பாதிக்கும். இதனால் உடல் பாகங்கள் கடுமையான வலி ஏற்படும்.
5. வயதானவர்கள், இளம் குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் ஆகியவர்கள் இது போன்ற உணவுகளை சாப்பிடுவதால் நாள்ப்பட்ட நோய்களால் பாதிக்கப்படுகிறார்கள். இது உடலை பலவீனப்படுத்தும்.
6. வேகாத இறைச்சியில் இருக்கும் பாக்ரீயாக்கள் எளிதாக பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு செப்சிஸ், உறுப்பு செயலிழப்பு போன்ற மோசமான நிலைக்கு ஆளாக்கும். உடனடியாக இவர்களுக்கு சிகிச்சை கொடுக்காவிட்டால் மரணம் கூட ஏற்படலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |