எதையுமே எதிர்பார்க்கமாட்டார்: அப்படிப்பட்ட மனிதர்... மதன் பாப் மறைவால் கலங்கிய இயக்குநர் விக்ரமன்!
பிரபல நகைச்சுவை நடிகரும், பன்முகக் கலைஞருமான மதன் பாப் தனது 71ஆவது வயதில் நேற்று காலமானார். அவருக்கு திரையுலகத்தை சேர்ந்தவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இவர் தமிழ் சினிமாவில் 150ற்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இயக்குநர் விக்ரமனுடன் நடிகர் மதன் பாப் 3 திரைப்படங்களில் பணியாற்றி உள்ளார்.
மதன் பாப் மரணம் பற்றி இயக்குநர் விக்ரமன்...
மதன் பாப் மரணம் பற்றி இயக்குநர் விக்ரமன் ஊடகங்களுடன் தனது சோகத்தை பகிர்ந்து கொண்டார்.மதன் பாப் குறித்து இயக்குநர் விக்ரமன் குறிப்பிடுகையில் , ‛‛என் படத்தில் 3 படத்தில் அவர் நடித்துள்ளார். பூவே உனக்காக, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், பிரியமான தோழி ஆகிய 3 திரைப்படங்களில் நடித்து இருந்தார்.
நானும் அவரும், பூவே உனக்காக படத்தில் ‛மச்சினிச்சி வர நேரம் மண் மணக்குது' பாடலில் இயக்குநராக நடித்து இருப்பார்.
சூட்டிங்கின்போது ராஜா சார் பாடல்கள் பற்றி பேசுவோம். பிரியமான தோழி சூட்டிங்கின்போது ஊட்டியில் தங்கியிருந்தோம். 2 நாள் வந்தார் என்று நினைக்கிறேன். அப்போதும் ராஜா சார் பாடல்கள் பற்றி பேசினோம்.
பால சந்தர் சார் தான் அவரை அறிமுகப்படுத்தி உள்ளார். பாலசந்தர் சார் மீது மதன் பாப் மிகுந்த மரியாதை கொண்டவர். எல்லாவற்றுக்கும் மேல் ரொம்ப நல்ல மனிதர்.
மரியாதை கொண்டவர். டெடிகேட்டட் ஆர்ட்டிஸ்ட். சின்சியராக இருப்பார். டே அண்ட் நைட் நடிப்பார். எதையும் எதிர்பார்க்கமாட்டார். பட்ஜெட் படம் சார் என்றாலும் பண்ணிவிடுவார். உன்னை நினைத்து படத்தில் கூட 2 சீன் அவரை வைத்து எடுத்தேன். ஆனால் அந்த காட்சியை தூக்க வேண்டிய நிலைமை வந்துவிட்டது.
அவர் ஒரு நல்ல நகைச்சுவை நடிகர். நல்ல நகைச்சுவை உணர்வு கொண்டவர். அடிப்படையில் இசை கலைஞர். நல்ல மியூசிக் அறிவு கொண்டவர். எல்லாவற்றுக்கும் மேல் இவர் ஒரு நல்ல மனிதர்.
எதையும் எதிர்பார்க்க மாட்டார். பட்ஜெட் படம் என்றாலும் கூட பண்ணி கொடுப்பார். ரொம்ப நல்ல மனிதர். அவரது மறைவு திரையுலகத்துக்கு மிகப்பெரிய இழப்பு என இயக்குநர் விக்ரமன் மிகுந்த வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |