இயக்குநர் விஜய்யின் வீட்டில் நிகழ்ந்த சோகம் - அதிர்ச்சியில் திரையுலகினர்
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் ஏ.எல்.விஜயின் தாயார் மரணமடைந்த தகவல் திரையுலகினரை சோகத்தில் உறைய வைத்துள்ளது.
இந்நிலையில் ஏ.எல்.அழகப்பனின் மனைவியும், ஏ.எல்.விஜய் மற்றும் ஏ.எல்.உதயா ஆகியோரது தாயாருமான ஏ.எல்.வள்ளியம்மை அவர்கள் சென்னையில் இன்று மரணம் அடைந்துள்ள சோக செய்தி தற்போது வெளியாகியுள்ளது.
அவருக்கு வயது 67.

சென்னை அபிபுல்லா சாலையில் உள்ள இவர்களது இல்லத்தில் ஏ.எல்.வள்ளியம்மை அவர்களுக்கு இறுதி அஞ்சலி மற்றும் மரியாதை செலுத்தப்படுகிறது.
திரைப்பட தயாரிப்பாளர்கள்
— Diamond Babu (@idiamondbabu) July 17, 2022
ஏ எல் அழகப்பன் அவர்களின் மனைவியும்
இயக்குனர் ஏ எல் விஜய், ஏ எல் உதயா அவர்களின் தாயாருமான
ஏ எல் வள்ளியம்மை அவர்கள் 17.07.2022 இன்று காலை இயற்கை எய்தினார் நாளை 10.30க்கு பெசன்ட்நகர் இடுகாட்டில் இறுதி சடங்கு நடைபெரும் pic.twitter.com/BBtEIVzk0K
திரையுலக கலைஞர்களும், நடிகர்களும், இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும், நடிகர் சங்கத்தினரும் ஏ.எல்.வள்ளியம்மை அவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.